அதிகரிக்கும் கொரோனா தொற்று நியூயார்க்கில் பள்ளிகள் மீண்டும் மூடல்

வியாழக்கிழமை, 19 நவம்பர் 2020      உலகம்
Schools 2020 11 08

Source: provided

நியூயார்க் : சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டி எடுத்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 

குறிப்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகரம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. மக்கள் தொகை அடர்த்தி காரணமாக நியூயார்க் நகரில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி நியூயார்க்கில் 6 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு 34 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வைரஸ் பரவல் சற்று குறைந்திருந்த போது நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது. 

ஆனால் நியூயார்க் நகரில் கொரோனா மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இரண்டாவது அலையால் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி நேற்று (வியாழக்கிழமை) முதல் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிக்கூடங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக 

நகர மேயர் பில் டி பல்சியோ தெரிவித்துள்ளார். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்படுவதாகவும், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து