நிவர் புயலை விட வேகமாக செயல் பட்டது தமிழக அரசு: அமைச்சர் தங்கமணி பேட்டி

வெள்ளிக்கிழமை, 27 நவம்பர் 2020      தமிழகம்
Thangamani-2020 11 26

Source: provided

நாமக்கல் : நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறி உள்ளார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூறியதாவது:-

நிவர் புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது. நிவர்' புயலால் மின்துறையில் ஏற்பட்ட சேத மதிப்பு இதுவரை ரூபாய் 15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

நிவர் புயலால் 2,488 மின்கம்பங்கள் சேதம். மின்னல் தாக்கி 108 மின்மாற்றிகள் பாதிப்படைந்துள்ளது.   கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் முழுமையாக மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது.

இனிவரும் காலங்களில் புயல், மழையால் பாதிக்காத வகையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும்.சென்னையில் 95 சதவீதம் மின் விநியோகம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து