எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

- ஜனவரி.1 - செர்பியாவில் பிறந்த மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான தனது நீண்டகால தோழி நடாசா ஸ்டான்கோவிச்சை கரம் பிடிப்பதாகவும், நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் ஹர்திக் பாண்ட்யா அறிவிப்பு.
- ஜனவரி.1. ஐ.சி.சி. நான்கு நாள் டெஸ்ட் திட்டத்திற்கு இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஆதரவு
- ஜனவரி 2: U-19 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட மன்ஜோத் கல்ரா வயது மோசடி காரணமாக ரஞ்சி போட்டியில் விளையாட தடைபெற்றார்.
- ஜனவரி. 3-ந் தேதி- நியூ சவுத் வேல்ஸ் காட்டுப் பகுதியல் புதர்கள் எரிந்து காட்டுத்தீயாக மாறி சிட்னி நகர் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து டெஸ்ட் போட்டி சிட்னியில் தொடங்குமா? என்ற கேள்வி எழுந்தது, இறுதியில் போட்டி நடத்தப்பட்டது.
- ஜனவரி 5: நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் ஜோ கார்ட்டர் 6 பந்தில் 6 சிக்ஸ் விளாசி சாதனைப் படைத்தார்.
- ஜனவரி 6: சிட்னி டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ராஸ் டெய்லர் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 20 ரன்னைக் கடந்த போது நியூசிலாந்து பேட்ஸ்மேன்களில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருந் ஸ்டீவன் பிளமிங்கை (7172) பின்னுக்குத் தள்ளினார்.
- ஜனவரி 7: யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக், யூரோப்பியன் நேஷன்ஸ் லீக், உலக கோப்பை, கிளப் உலக கோப்பை, கோபா டெல் ரே, யூரோ தகுதிச் சுற்று, உலக கோப்பை தகுதி சுற்று, லா லிகா, பிரிமீயர் லீக், செர்ரி ஏ என 10 தொடர்களில் ஹாட்ரிக் கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை.
- ஜனவரி 7: நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கு தென்ஆப்பிரிக்கா ஆதரவு
- ஜனவரி 8: செனகல் நாட்டைச் சேர்ந்த சேடியோ மானே, முகமது சாலாவை பின்னுக்கு தள்ளி 2019-ம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கால்பந்து வீரர் விருதை வென்றுள்ளார்.
- ஜனவரி 12: ஆக்லாந்து கிளாசிக் தொடரில் செரீனா வில்லியம்ஸ் பதக்கம் வென்றார். 2017-ம் ஆண்டு குழந்தை பெற்ற பின் அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.
- ஜனவரி 20: போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் ஜோ ரூட் 28 ரன்கள் விட்டுக்கொடுத்தது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள் வரிசையில் இணைந்தார்.
- ஜனவரி 21: தென்ஆப்பிரிக்கா டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் குயிண்டான் டி காக் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
- ஜனவரி 26: அமெரிக்காவின் பிரபல கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரையன்ட் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் பலியாகியுள்ளார். இதில் கோப் பிரையன், அவரது 13 வயது மகள் ஜியானா, கூடைப்பந்து பயிற்சியாளர் கிரிஸ்டினா உள்ளிட்ட 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- ஜனவரி 29: தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டியில் 87.86 தூரத்திற்கு ஈட்டி எறிந்ததன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.
- ஆஸ்திரேலியா ஓபன் (ஜனவரி 20 முதல் பிப்ரவரி 2): கிராண்ட் ஸ்லாம் டென்னிசில் வருடத்தின் முதல் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் சோபியா கெனின் சாம்பியன் ஆனார்.
- பிப்ரவரி 5: ஹாமில்டனில் இந்தியாவுக்கு எதிராக 348 ரன்களை எட்டியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அதிகபட்சமான இலக்கை எட்டி சாதனைப் படைத்தது.
- பிப்ரவரி 7: கோபா டெல் ரே கால்பந்து தொடரின் காலிறுதியில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி
- பிப்ரவரி 9: தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற U19 உலக கோப்பையை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது வங்காளதேசம்.
- பிப்ரவரி 11- நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என இழந்ததன் மூலம் 31 வருடத்திற்குப் பிறகு ஒயிட்வாஷ் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்தது இந்தியா.
- பிப்ரவரி 12: பார்முலா-1 கார் பந்தயத்தில் ஷாங்காய் நகரில் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற இருந்த சீனா கிராண்ட் பிரி பந்தயம் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- பிப்ரவரி 18: ஐ.பி.எல் 2020 சீசன் மார்ச் 29-ந்தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
- பிப்ரவரி 20: ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தடை
- பிப்ரவரி 21: சர்வதேச அளவில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை ராஸ் டெய்லர் படைத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான 100-வது டெஸ்டில் களம் இறங்கிய டெய்லர் இந்த சாதனையை பதிவு செய்தார்.
- பிப்ரவரி 21: இந்தியாவின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பிரக்யான் ஓஜா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு
- பிப்ரவரி 23: கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்பால் அணிக்கெதிராக விளையாடியதன் மூலம் 1000 போட்டிகளில் விளையாடி சாதனைப் படைத்துள்ளார்.
- பிப்ரவரி 25: 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் அருணாச்சல பிரதேசம் அணிக்கெதிராக சண்டிகர் வீராங்கனை காஷ்வீ கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
- பிப்ரவரி 26: நட்சத்திர டென்னிஸ் வீராங்கனையாக திகழ்ந்த 32 வயதான ரஷியாவின் மரியா ஷரபோவா ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
- பிப்ரவரி 28: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதன்முறையாக இத்தாலியில் ‘செரி ஏ’ லீக் கால்பந்து போட்டிகள் மூடிய மைதானத்திற்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- மார்ச் 01: துபாயில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததால் 3-ந்தேதி நடக்க இருக்கும் கூட்டத்தை பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி புறக்கணித்தார்.
- மார்ச் 04: இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடியதன் மூலம் 500 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் பொல்லார்ட்.
- மார்ச் 05: போலி பாஸ்போர்ட் உடன் பராகுவேயில் சிக்கிய கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ
- மார்ச் 08: ஜோர்டானில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் குவாலிபையர் குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் விகாஸ் கிருஷ்ணன், பூஜா ராணி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
- மார்ச் 08: பெண்களுக்கான டி20 உலக கோப்பை இறுதி போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா 184 ரன்கள் குவித்தது. பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 99 ரன்னில் சுருண்டு 85 ரன்னில் தோல்வியைத் தழுவி சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது.
- மார்ச் 10: ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை மேரிகோம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
- மார்ச் 10: இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டி கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
- மார்ச் 12: இந்தியா - தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் கொரோனா தொற்றால் ரத்து செய்யப்பட்டது.
- மார்ச் 13: இலங்கையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தை இடையில் ரத்து செய்து அவசரமாக சொந்த நாடு திரும்பியது. இதற்குப் பிறகு கிரிக்கெட் தொடர்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.
- மார்ச் 13: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
- மார்ச் 13: ரஞ்சி டிராபி இறுதி போட்டி டிராவில் முடிந்த நிலையில், முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் சவுராஷ்டிரா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. பெங்கால் அணி ஏமாற்றம் அடைந்தது.
- மார்ச் 13: இந்தியா - தென்ஆப்பிரிக்கா போட்டிகள் ரத்து என அதிரடி அறிவிப்பு. 2-வது போட்டி லக்னோவில் 15-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி கொல்கத்தாவில் 18-ந்தேதியும் நடைபெற இருந்தது. 12-ந்தேதி இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருந்த ஆட்டம் மழையால் போட்டி கைவிடப்பட்டது.
- மார்ச் 17: கொரோனா பீதி: பாகிஸ்தான் சூப்பர் லீக் அரையிறுதி, இறுதி போட்டிகள் ரத்து 17 அரையிறுதி. 18 இறுதிப் போட்டி.
- மார்ச் 23: சுரேஷ் ரெய்னா - பிரியங்கா ஜோடிக்கு ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ரியோ எனப் பெயரிட்டுள்ளனர். சுரேஷ் ரெய்னா - பிரியங்கா ஜோடிக்கு ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
- மார்ச் 24: உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜப்பான் டோக்கியோ நகரில் ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை நடைபெற இருந்தது.
- டோக்கியோஒலிம்பிக்
- ஏப்ரல் 02: 134-வது விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ஜூன் 29-ந் தேதி முதல் ஜூலை 12-ந்தேதி வரை லண்டனில் நடத்தப்பட இருந்தது. கொரோனா தொற்றால் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2-வது உலகப்போருக்குப்பின் முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 06: ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓ'கீபே முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.
- ஏப்ரல் 15: ஐ.பி.எல் சீசன் 2020 காலவரையின்றி ஒத்திவைப்பு என அணிகளிடம் தெரிவித்தது பிசிசிஐ
- கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமானதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
- ஜூன் 3-ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்ட பண்டேஸ்லிகா கால்பந்து லீக்கில் பேயர்ன் முனிச் சாம்பியன் பட்டம் வென்றது.
- மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் ஜூன் 8-ந்தேதியில் இருந்து தொடங்கியது. இங்கிலாந்தில் மீண்டும் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் பயோ-செக்யூர் வளையத்திற்குள் வீரர்கள் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டது.
- ஜூன் 11-ந்தேதி மீண்டும் தொடங்கப்பட்ட லா லிகாவில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- ஜூன் மதம் 17-ந்தேதி இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. லிவர்பூல் அணி 30 வருடங்களுக்குப்பின் சாம்பியன் பட்டம் வென்றது.
- சாம்பியன்கோப்பையுடன்லிவர்பூல்அணிவீரர்கள்
- ஆகஸ்ட் 07: அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடைபெற இருந்த டி20 உலகக் கோப்பை ஒத்தி வைக்கப்பட்டதாக ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
- ஆகஸ்ட் 15: இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஒயிட்-பால் கிரக்கெட்டான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
- ஆகஸ்ட் 31-ந்தேதி முதல் செப்டம்பர் 13-ந்தேதி வரை நடைபெற்ற அமெரிக்க ஓபனில் டொமினிக் தீம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டோரியா அஸரெங்காவை வீழ்த்தி நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
- செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10: ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் 13-வது சீசன் செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டது. நவம்பர் 10-ந்தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- கிராண்ட் ஸ்லாம் டென்னிசில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் செப்டம்பர் 27-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதி வரை நடைபெற்றதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடால் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 13-வது முறையாக பிரெஞ்ச் ஓபனை வென்ற நடால், அதிக முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற பெடரர் சாதனையை சமன் செய்துள்ளார். இந்தத் தொடரில் நடால் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சோபியா கெனின்-ஐ வீழ்த்தி இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- நவம்பர் 17 முதல் நவம்பர் 20 வரை: அடிலெய்டில் நடைபெற்ற பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது இன்னிங்சில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு, மிகவும் குறைந்த ஸ்கோரில் சுருண்ட இந்திய அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்தது. சர்வதேச அளவில் ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன்னை தாண்டாத 2-வது ஆட்டம் என கரும்புள்ளியும் குத்தப்பட்டது.
- ஜூலை 5-ந்தேதியில் இருந்து டிசம்பர் 13-ந்தேதி வரை நடைபெற்ற பார்முலா 1 கார்பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப்படைத்தார். இது அவரின் 7-வது சாம்பியன் பட்டம் ஆகும். இதன்மூலம் முன்னாள் சாம்பியன் ஜூமாக்கரின் சாதனையை சமன் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 12 months 1 day ago |
-
ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு
27 Aug 2025திருப்பத்தூர் : ஆம்பூர் கலவரம் வழக்கில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்த தீர்ப்பு இன்று (ஆக.28-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: 5 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 20 பேர் பலி : இந்தியா கடும் கண்டனம்
27 Aug 2025புதுடெல்லி : காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது என்றும், ஆழ்ந்த வர
-
50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை முக்கிய ஆலோசனை
27 Aug 2025புதுடெல்லி : இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விவகாரம் தொடர்பாக நேற்று பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தியது.
-
விநாயகர் சதுர்த்தி விழா: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து
27 Aug 2025புதுடெல்லி : இந்துக்களின் முதற்கடவுளான விநாயகரை வரவேற்கும் விதமாக, நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-08-2025.
27 Aug 2025 -
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் திருப்பூரில் உற்பத்தியை குறைக்க பின்னலாடை நிறுவனங்கள் முடிவு
27 Aug 2025சென்னை : அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்கள் மீது சரமாரியாக வரியை உயர்த்தி வருகிறார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: பொதுமக்களிடம் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்
27 Aug 2025டெல்லி : வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் பங்கேற்றார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
27 Aug 2025சென்னை : பீகாரில் திறந்தவெளி வாகனத்தில் ராகுலுடன் பேரணியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
-
ஆசிய கோப்பையில் விளையாடுவாரா? சூர்யகுமார் யாதவ்
27 Aug 2025டெல்லி : ஆசிய கோப்பையில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவாரா என்ற தகவல் ரசிகர்கள் மத்தில் பரவியுள்ளது.
-
நெல்லையில் செப்.7 வாக்கு திருட்டு விளக்க மாநாடு : செல்வப்பெருந்தகை அறிவிப்பு
27 Aug 2025நெல்லை : திருநெல்வேலியில் வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி வாக்குத் திருட்டு விளக்க மாநாடு நடத்தப்படும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
-
தமிழகம் முழுவதும் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
27 Aug 2025சென்னை : தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
-
பா.ஜ.க.வின் அதிகாரத்தை மக்கள் பறிப்பது நிச்சயம் : பீகாரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
27 Aug 2025முசாபர்பூர் : 'பா.ஜ.க. எப்படி தேர்தல்களை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்பதை ராகுல் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார்.
-
ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி
27 Aug 2025சென்னை : ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
-
இ.பி.எஸ். இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
27 Aug 2025சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் தமிழக முதல்வர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட சம்பவ
-
கோடநாடு விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
27 Aug 2025ஊட்டி : கோடநாடு பங்களாவை மாவட்ட நீதிபதி மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய
-
ராஜஸ்தானில் தேர்வு மோசடி: 415 பேருக்கு வாழ்நாள் தடை
27 Aug 2025ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் அரசு தேர்வுகளில் மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வுகளை எதிர்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
-
இந்தியா - பாகிஸ்தான் உட்பட 7 போர்களை நிறுத்தியுள்ளேன் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து
27 Aug 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் கொரிய அதிபருடனான சந்திப்பின் போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை குறித்து டொனால்டு ட்ரம்ப் கூறியதா
-
உலக பாட்மிண்டன் சாம்பியன்: முதல் சுற்றில் சிந்து தகுதி
27 Aug 2025பாரிஸ் : உலக பாட்மிட்டன் சாம்பியன் போட்டியில் முதல் சுற்றுக்கு சிந்து தகுதி பெற்றார்.
-
தோல் புற்றுநோயால் ஆஸி. முன்னாள் கேப்டன் பாதிப்பு
27 Aug 2025சிட்னி : ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் புற்று நோயால் பாதிப்பு.
-
மக்கள் சக்திதான் பெரிது என்பதை பீகார் மாநில மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Aug 2025பாட்னா : மக்கள் சக்திக்கு முன் எந்த ஒரு சர்வாதிகாரியும் மண்டியிட்டுதான் ஆக வேண்டும் என்பதை பீகார் மக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ
-
வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் டிரில்லியன் டாலர்களை கஜானாவில் சேர்த்துள்ளோம் : அதிபர் ட்ரம்ப் பெருமிதம்
27 Aug 2025வாஷிங்டன் : வெளிநாடுகள், பில்லியன்கள் அல்ல... டிரில்லியன் டாலர்களை எங்களுடைய கஜானாவுக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளன என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டியில் தமிழக வீரர் அசத்தல்
27 Aug 2025டெல்லி : தென்மண்டல டென்பின் பவுலிங் போட்டி, ஐதராபாத்தில் உள்ள கேம் எக்ஸ்ட்ரீம் பவுலிங் சென்டரில் நடைபெற்றது.
-
புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தேவங்க் தலால் நியமனம்
27 Aug 2025மும்பை : புரோ கபடி லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக தேவங்க் தலால் நியமனம் செய்யப்பட்டார்.
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சின்னர் வெற்றி
27 Aug 2025நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் சின்னர் வெற்றி பெற்றார்.
-
அமெரிக்காவின் வரிவிதிப்பால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.4.2 லட்சம் கோடி பாதிப்பு ஏற்படும் சூழல்
27 Aug 2025மும்பை : அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக இந்தியாவின் ரூ. 4.2 லட்சம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.