முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

புதன்கிழமை, 27 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Vinayagar 2025-08-26

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் கோவில்களில் நேற்று விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 

விநாயகர் சதுர்த்தி, இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் இந்த விழா, தடைகளை நீக்கி, வெற்றி, செல்வம், மற்றும் அமைதியை அருளும் விநாயகப் பெருமானின் அவதார தினமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது. 

இந்த புனித நாளில், விநாயகரை வழிபடுவது புதிய முயற்சிகள், கல்வி, அல்லது தொழிலைத் தொடங்குவதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. வீடுகளிலும், பொது இடங்களிலும் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, அருகம்புல், எருக்கம்பூ, மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், வாழைப்பழம் உள்ளிட்டவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. விழாவின் முடிவில், சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.

இது பக்தர்களின் கவலைகளை விநாயகர் அகற்றுவதாக நம்பப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி, இயற்கையான களிமண் சிலைகள் பயன்படுத்தப்படுவது இன்று பரவலாக ஊக்குவிக்கப்படுகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஆன்மிக உற்சாகத்துடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. 

சென்னையில், இந்த விழாவை முன்னிட்டு, அதிகாலை முதல் கோயில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில், சென்னை மணக்குள விநாயகர் கோயில் உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய, கோயில் நிர்வாகங்கள் தடுப்புகள் அமைத்து, ஒழுங்கு மிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

விநாயகர் சிலைகள் ரூ.50 முதல் ரூ.1,000 வரை விற்பனையாகின. சென்னையில், 3 அடி முதல் 15 அடி உயரம் வரையிலான சிலைகள் பூஜைக்காக அமைக்கப்பட உள்ளன. இந்து அமைப்புகள் 2,000-க்கும் மேற்பட்ட சிலைகளுக்கு மனு அளித்திருந்தாலும், பாதுகாப்பு காரணங்களால் 1,519 சிலைகளுக்கு மட்டுமே சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அலங்காரப் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. பக்தர்களை கவரும் வகையில் பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

சென்னை காவல்துறை ஆணையர் அருண் உத்தரவுப்படி, கூடுதல் ஆணையர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், கார்த்திகேயன் ஆகியோரின் மேற்பார்வையில், 16,500 காவலர்கள் மற்றும் 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட 18,000 பேர் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து