முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல்ஹாசன் மீது கோவை தொழில்துறையினர் அதிருப்தி

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      அரசியல்
Image Unavailable

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் தொழில் துறையினர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பேசுவதற்கும் கருத்துகளை எடுத்துவைக்கவும் கூட வாய்ப்பு கொடுக்கவில்லை என்று தொழில்துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெவ்வேறு தொழிற்துறை சார்ந்த நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

தொழில்துறையில் உள்ள சிரமங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கேட்கப்படும் என்று தொழில் முனைவோர் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால் வழக்கம் போல் மற்ற பிரச்சினைகளே இந்த கூட்டத்தில் அதிகமாக பேசப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களது குறைகளை கூற கூட அந்த ஆலோசனை கூட்டத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை கமல்ஹாசனிடம் வழங்கலாம் என்று நினைத்திருந்த போதும் அதற்கும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறுகையில் மூலப்பொருட்கள் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. பல்வேறு பிரச்சினைகளை தொழில்துறையினர் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒரு அரசியல் கட்சி எங்களை அழைத்ததால் அவரிடம் பிரச்சினையை தெரிவித்து மனுக்களை வழங்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால் இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. முழு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து