பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது : தமிழக நிதித்துறை செயலாளர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 பெப்ரவரி 2021      தமிழகம்
Petrol-diesel-2021-02-22

Source: provided

சென்னை : பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதித்துறை செயலர் மேலும் கூறுகையில்,  தமிழகத்தின் 2020-21 பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் 7 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி என கணக்கிடப்பட்டுள்ளது . 

அடுத்த ஆண்டு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கில் இருக்கும். பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசுதான் உயர்த்தியது; மாநில அரசு உயர்த்தவில்லை என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து