உலக தடகள 4 x 100 ரிலே: இந்திய அணியில் தமிழக வீராங்கனை தனலட்சுமி - ஹிமா தாஸ் - டூட்டி சந்த்

புதன்கிழமை, 7 ஏப்ரல் 2021      விளையாட்டு
Dhana-Laxmi 2021 04 07

Source: provided

புதுடெல்லி : உலக தடகள ரிலே போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழக வீராங்கனை தனலட்சுமியுடன் ஹிமா தாஸ், டூட்டி சந்த் ஆகியோர் இடம்பிடித்துள்ளனா்.

போலாந்தில் மே 1 மற்றும் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள இப்போட்டி, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்பு வழங்கும் போட்டியாகும். இப்போட்டியில் ஆடவருக்கான 4x400 மீட்டா் ரிலே பிரிவுக்காக அமோஜ் ஜேக்கப், நாகநாதன் பாண்டி, முகமது அனாஸ் யாஹியா, ஆரோக்கிய ராஜீவ், சா்தாக் பாம்ப்ரி, அய்யாசாமி தருண், நிர்மல் நோவா டாம் ஆகியோர் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மகளிருக்கான 4x400 மீட்டா் ரிலேவில் பூவம்மா, சுபா வெங்கடேஷ், கிரன், அஞ்சலி தேவி, ரேவதி, விஸ்மயா, ஜிஸ்னா மேத்யூ ஆகியோர் களம் காணுகின்றனா். மகளிருக்கான 4x100 மீட்டா் ரிலேவுக்காக தனலட்சுமி, டூட்டி சந்த், ஹிமா தாஸ், அா்ச்சனா சுசீந்திரன், ஹீமாஸ்ரீ ராய், தானேஷ்வரி ஆகியோர் தோ்வாகியுள்ளனா்.

இப்போட்டியில் முதல் 8 இடங்களுக்குள்ளாக வரும் அணிகள் நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெறும். தோஹாவில் 2019-இல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்ன் மூலம் 4x400 மீட்டருக்கான கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றுவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து