இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிரேசிலியா: இறுதி ஆட்டத்தில் பிரேசிலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டீனா 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றி மூலம் மெஸ்யின் கனவும் நனவாகியுள்ளது. அணி கேப்டனாக இருந்து அவர் பெற்றுத் தரும் முதல் கோபா கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் ஆதிக்கம்...
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது. பிரேசிலிலுள்ள மரக்காணா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பிரேசில் ஆக்ரோஷம் காட்டி வந்தது. எனினும், 22-வது நிமிடத்தில் அர்ஜென்டீனா வீரர் ரோட்ரிகோ டி பால் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார்.
அர்ஜென்டீனா...
முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழாததால் அர்ஜென்டீனா 1-0 என முன்னிலை வகித்தது. 2-வது பாதி ஆட்டத்தில் பிரேசில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் முதல் கோலுக்கு கடுமையாக முயற்சித்தார்.
கூடுதல் நேரம்...
எனினும், அர்ஜென்டீனா சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பிரேசில் அணியால் கூடுதல் நேரத்திலும் கோல் அடித்து சமன் செய்ய முடியவில்லை. இதன்மூலம், அர்ஜென்டீனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.
15-வது முறை...
கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டீனா வெல்வது இது 15-வது முறை. அர்ஜென்டீனாவுக்கு லயோனல் மெஸ்ஸி பெற்று தரும் முதல் பெரிய சர்வதேச கோப்பை இது.
BOX - 1
தங்க காலணி விருது
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த லயோனல் மெஸ்ஸிக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்டதில் மெஸ்ஸி எந்த கோலும் போடவில்லை. இருப்பினும் தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய மெஸ்ஸி அடித்த கோல்களின் மொத்த எண்ணிக்கை 4. இதற்காக அவருக்கு தங்க காலணி விருது வழங்கப்பட்டிருக்கிறது.
0000000000
BOX - 2
மரடோனாவுக்கு அர்ப்பணிப்பு
கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர். கால்பந்தின் ஜாம்பவான் மரடோனா. அவரது தலைமையில் அர்ஜென் டினா 1986-ல் உலக கோப்பையை கைப்பற்றியது.
மரடோனா வழியில் தான் மெஸ்சி உலகின் சிறந்த கால் பந்து வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இந்த நிலையில் கோபா அமெரிக்க கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா வீரர்கள் இந்த வெற்றியை மறைந்த மரடோனாவுக்கு அர்ப்பணித்துள்ளனர்.
00000000
BOX - 3
நெய்மர் கண்ணீர்
கடைசி விசில் அடிக்கப்பட்டவுடன் மைதான ஸ்க்ரீன் அர்ஜெண்டீனா சாம்பியன், லியோனல் மெஸ்ஸி சாம்பியன் என்று ஒளிர்ந்தது. நெய்மாரினால் கண்ணீரை அடக்க முடியவில்லை மண்டியிட்டு கண்ணீர் விட்டுக் கதறியது ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
இந்த வெற்றி அர்ஜெண்டீனாவின் 15வது கோப்பா அமெரிக்கா சாம்பியன் பட்டமாகும். உருகுவேயுடன் சமன் செய்துள்ளது. இந்த வெற்றியுடன் 20 போட்டிகளில் தோற்காமல் ஒரு தொடர்ச்சியை அர்ஜெண்டீனா கடைப்பிடித்து வருகிறது. 2018 உலகக்கோப்பையில் பெல்ஜியமிடம் தோற்று பிரேசில் வெளியேறிய பிறகு ஒரு மேஜர் தோல்வியை அர்ஜெண்டீனா பிரேசிலுக்கு பரிசாக அளித்துள்ளது.
0000000000
BOX - 4
மெஸ்ஸி ஆறுதல்
நெய்மருக்கு மெஸ்ஸி ஆறுதல் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரேசில் கேப்டன் நெய்மார் மைதானத்தில் குலுங்கிக் குலுங்கி அழுதார். நடுவர் இறுதிவிசில் அடித்ததும் மைதானத்தில் அர்ஜெண்டீனா வீரர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர்.
பிரேசில் வீரர் நெய்மர் , மெஸ்ஸியை நோக்கி வந்தார். மெஸ்ஸி, நெய்மரை ஆரத்தழுவி அவருக்கு ஆறுதல் சொன்னார். அதேநேரத்தில் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருந்த தனது அணி வீரர்களில் முதுகில் தட்டிக்கொடுத்த மெஸ்ஸி. நெய்மரை ஆரத்தழுவி ஆறுதல் கூறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டைக்கோஸ் வடை![]() 3 days 12 hours ago |
கீரை ஆம்லெட்![]() 6 days 11 hours ago |
உருளை கிழங்கு புட்டு![]() 1 week 3 days ago |
-
டுவிட்டரில் புதிய விதிகளை அறிவித்த எலான் மஸ்க்
28 Mar 2023வாஷிங்டன் : டுவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் ஏப்ரல் 15-ம் தேதி முதல் வெரிபைடு அக்கவுண்ட்கள் மட்டுமே For You பிரிவில் பரிந்துரை செய்யப்படும் என அறிவித்துள்ளார். இத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 28-03-2023.
28 Mar 2023 -
கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு மாநில அரசுகளை சார்ந்தது: பார்லி.யில் மத்திய அரசு தகவல்
28 Mar 2023கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு, மாநில அரசுகளை சார்ந்தது என்ற தகவல் மக்களவையில் வெளியாகி உள்ளது.
-
சவுதியில் பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலி
28 Mar 2023ரியாத் : சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பஸ் விபத்தில் சிக்கி புனித யாத்திரை சென்ற 20 பேர் பலியாகினர்.
-
பா.ஜ.க.வினர் கடுமையாக போராட தயாராக வேண்டும் : பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்
28 Mar 2023புதுடெல்லி : கடுமையாக போராட தயாராகுங்கள் என்று பாராளுமன்ற பா.ஜ.க. கூட்டத்தில் பா.ஜ.க.வினருக்கு பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
-
அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஊக்குவிப்பு மையங்கள்: ரூ. 15 கோடியில் பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
28 Mar 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஏற்றுமதி ஊக்குவி
-
7-வது பொதுச்செயலாளர்: அ.தி.மு.க.வின் அதிகாரம் மிக்க பதவியில் எடப்பாடி பழனிசாமி
28 Mar 2023அ.தி.மு.க.வில் அதிகாரம் மிக்க பெரிய பதவியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்துள்ளார்.
-
6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம்
28 Mar 2023மதுரை : தமிழக அரசில் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு
-
எனது ஆட்டத்திறனுக்கு பிராட்மேனுக்கும் பங்கு : சச்சின் டெண்டுல்கர் உருக்கம்
28 Mar 2023மும்பை : எனது கிரிக்கெட் ஆட்டத்திற்கு பிராட்மேனுக்கு முக்கிய பங்குண்டு என்று தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், எனக்கு நம்பிக்கை கொடுத்தது அவரின் அறிவுரைகள்தான் என்றும்
-
காலில் காயம் காரணமாக ஐ.பி.எல்.லில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச மாட்டார்: மைக்கேல்
28 Mar 2023சென்னை : காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். தொடரில் பந்து வீச மாட்டார் என்று சி.எஸ்.கே.
-
டெட் தாள் 2- தேர்வு முடிவுகள் வெளியீடு
28 Mar 2023சென்னை : டெட் தாள் 2- தேர்வு முடிவுகளை ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ் மேல்முறையீடு: இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணை
28 Mar 2023அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்ற சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ்.
-
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி: அன்புமணி வாழ்த்து
28 Mar 2023சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ஏப். 23-ல் துவக்கம் : மே. 02-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது
28 Mar 2023மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டம் தற்காலிக நிறுத்தம் : இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்
28 Mar 2023ஜெருசலேம் : புதிய நீதித்துறை சிர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார்.
-
ஷேவாக்கை நினைவு கூர்ந்த சி.எஸ்.கே.
28 Mar 2023சென்னை : புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான வீரேந்தர் சேவாக் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 2008-ம் ஆண்டு நேற்றை தினத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக
-
உக்ரைனில் படித்த இந்திய மருத்துவ மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு : மத்திய அரசு தகவலால் மகிழ்ச்சி
28 Mar 2023புதுடெல்லி : உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் பகுதி 1, பகுதி 2 தேர்வுகளை எழுத வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கொலை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அறவே இல்லாத நிலை உள்ளது : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
28 Mar 2023சென்னை : பெரம்பூர் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
மெஸ்ஸியை கவுரவித்த கால்பந்து கூட்டமைப்பு
28 Mar 2023கடந்த ஆண்டு டிசம்பரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அது முதல் மெஸ்ஸி செல்லும் இடமெல்லாம் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
-
ரூ.2 ஆயிரத்து 753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளின் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் தகவல்
28 Mar 2023சென்னை : ரூ.2 ஆயிரத்து 753 கோடி மதிப்பில் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தரம் உயர்த்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
-
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று துவங்குகிறது : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
28 Mar 2023பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
எம்.பி.பி.எஸ். சீட்வாங்கி தருவதாக ஏமாற்றிய ஜெமினிகணேசன் பேரனின் மனைவி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
28 Mar 2023சென்னை : எம்.பி.பி.எஸ்.
-
மகளிர் கட்டணமில்லா பேருந்துகளில் இதுவரை 258.06 கோடி பயண நடைகள்: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
28 Mar 2023தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன.
-
சபரிமலையில் இருந்து திரும்பிய போது தமிழக அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து 64 பேர் காயம்
28 Mar 2023பத்தனம்திட்டா : கேரளாவில் சபரிமலையில் இருந்து திரும்பிய போது தமிழக அய்யப்ப பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து 64 பேர் காயமடைந்தனர்.
-
ராகுல் காந்தி குடியிருக்க எனது பங்களாவை காலி செய்ய தயார்: மல்லிகார்ஜுன கார்கே பேட்டி
28 Mar 2023ராகுல் காந்தி வசிக்க தனது பங்களாவை தர தயார் என்று காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.