சென்னை ஈ.சி.ஆர். சாலையில் போர் விமானம் தரையிறங்கும் வசதி: மத்திய அமைச்சர் கட்காரி தகவல்

Nitin-Gadkari-2021-09-09

சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சாலையில் போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும் என மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர்  நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்

ராஜஸ்தானின் பார்மரில் உள்ள காந்தவ் பகசார் பிரிவு, தேசிய நெடுஞ்சாலையில் விமானங்கள் தரையிறங்கும் நிகழ்ச்சியை, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி ஆகியோர் நேற்று தொடங்கி  வைத்தனர். 

அப்போது மத்திய அமைச்சர் கட்காரி பேசியதாவது, 

சென்னை, புதுச்சேரி சாலை மற்றும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், அரியானா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் 19 இடங்களில் போர் விமானங்கள் அவசரகால தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்படும். 

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கும் பணி அதிவிரைவாக மேற்கொள்ளப்படுகிறது. இனி நமது தேசிய நெடுஞ்சாலைகளை ராணுவத்தினரும் பயன்படுத்துவார்கள் என்பதால் நம் நாடு மேலும் பாதுகாப்பாக இருப்பதுடன், அவசரகால நிலைகளுக்கு எப்போதும் தயாராகவே இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து