கொரோனாவுக்கு முதலாவது ஊசியில்லா பிளாஸ்மா தடுப்பு மருந்து: இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம்

Plasma 2021 09 13

Source: provided

டெல்லி : ஊசியில்லா கொரோனா தடுப்பு மருந்து அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் zydus cadila நிறுவனத்தின் ஊசியில்லா கொரோனா தடுப்பூசியான zycov-d மருந்து அடுத்த மாதம் முதல் வாரம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாதம் மத்தியில் இருந்து தடுப்பூசி விநியோகம் ஆரம்பமாகும் என்றும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் கிடைக்க தொடங்கும் என்றும் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கூறியுள்ளார். முதலில் மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளும் பிறகு தயாரிப்பு இலக்கு அதிகரித்து மாதத்திற்கு 4 கோடி முதல் 5 கோடி வரை தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் 6வது தடுப்பூசியாக ‘ஜைடஸ் கேடில்லா’ என்ற இந்திய நிறுவனம் தயாரித்துள்ள, முதல் மரபணு (டி.என்.ஏ.) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான ஜைகோவ் - டி’க்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அவசர கால பயன்பாட்டிற்கு கடந்த அனுமதி வழங்கி உள்ளது.

இது 12 முதல் 18 வயதுடைய பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள முதல் தடுப்பு மருந்தாகும். மேலும், ஊசி மூலம் செலுத்தப்படாத உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்
View all comments

வாசகர் கருத்து