முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை அமைச்சரின் பதவி பறிப்பு: ராஜபக்சே நடவடிக்கை

வியாழக்கிழமை, 16 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

சிறையில் தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கியை வைத்து சுட்டு விடுவதாக மிரட்டிய, இலங்கை அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிறைச்சாலைகள் துறை இணையமைச்சராக இருந்தவர் லோஹன் ரத்வத்தே, கடந்த 12-ம் தேதி மாலை இலங்கையில் உள்ள அனுராதபுரம் சிறைச்சாலையை பார்வையிட சென்றார். அப்போது, சிறைக்குள் கைதிகளை பார்வையிட்ட அவர், அங்கிருந்த‌ 2 தமிழ் அரசியல் கைதிகளை  மட்டும் அழைத்து அவர்களை மண்டியிட வைத்து தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இலங்கை முழுவதும் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதியான ஹன்னா சிங்கர் ஹம்டியும் ரத்வத்தேவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச அளவில் இலங்கை அரசுக்கு பெரும் அழுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து, பதவியை ராஜினாமா செய்யும்படி ரத்வத்தேவுக்கு இத்தாலிக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இலங்கை பிரதமர் மகிந்தா ராஜபக்சே உத்தரவிட்டதாக செய்திகள் வெளியானது. இது வெளியான சிறிது நேரத்தில், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு லோஹன் ரத்வத்தே தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.

சிறைக்குள் செல்பவர்கள் யாராக இருந்தாலும், தனது சொந்த பாதுகாப்புக்கான ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பது சட்டம். ஆனால், அதை மீறி தனது கைத்துப்பாக்கியை ரத்வத்தே சிறைக்குள் எடுத்துச் சென்றுள்ளார்.

 

அனுராதபுரம் சிறைக்கு செல்வதற்கு முந்தைய நாள் நள்ளிரவு தனது நண்பர்களை அழைத்துச் சென்று, கொழும்பு பிரதான சிறையில் கைதிகளை தூக்கிலிட பயன்படுத்தப்படும் தூக்கு மரத்தை ரத்வத்தே காட்டியதும் சர்ச்சையாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து