முக்கிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் ரஜினி சந்திப்பு-வாழ்த்து பெற்றார்

Rajini-Modi 2021 10 27

Source: provided

புதுடெல்லி : பிரதமர் நரேந்திரமோடியை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவியுடன் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார். 

தமிழ் சினிமாவில் இவ்விருதினை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குனர் பாலச்சந்தர் ஏற்கனவே பெற்றுள்ளனர். தற்போது திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்த் நேற்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். பிதமர் மோடியுடனான சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினி காந்தும் உடன் இருந்தார். அதேபோல், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். 

இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும், பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி’ என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து