முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் வளர்ச்சி வாகனத்தின் பிரேக்குகள் செயலிழந்து விட்டன: ராகுல் காந்தி விமர்சனம்

சனிக்கிழமை, 6 நவம்பர் 2021      அரசியல்
Image Unavailable

லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது விறகு அடுப்பை பயன்படுத்தும் கட்டாயத்தில் உள்ளதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, மோடியின் வளர்ச்சி வாகனத்தின் பிரேக்குகள் செயலிழந்துவிட்டதாக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  மத்திய அரசு குறைந்தது. இதேபோல் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அதன்படி பல மாநிலங்கள் வாட் வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. 

இந்நிலையில், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளதை சுட்டிக் காட்டிய ராகுல் காந்தி, மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். எரிவாயு விலை உயர்வு காரணமாக கிராமப்புறங்களில் 42 சதவீத மக்கள் சமையல் எரிவாயு பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு விறகு அடுப்புக்கு திரும்பியிருப்பதாக வெளியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

 

‘வளர்ச்சி என்ற சொல்லில் இருந்து பல மைல்கள் தொலைவில் உள்ளோம். லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்போது விறகு அடுப்பை பயன்படுத்தும் கட்டாயத்தில் உள்ளன. மோடியின் வளர்ச்சி வாகனம் ரிவர்ஸ் கியரில் உள்ளது. அதன் பிரேக்குகளும் செயலிழந்துவிட்டன’ என ராகுல் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து