முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகேந்திர சிங்டோனி பொறுப்புள்ள கேப்டனானதற்கு யார் காரணம்? சேவாக் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி: திராவிட் கேப்டன்சியில் ஆடிய தோனி ஒருமுறை பொறுப்பற்ற முறையில் அவுட் ஆனார், அதற்கு திராவிட் தோனியை கொஞ்சம் கடிந்து கொண்டார். அன்று திராவிட் தோனியிடம் அப்படி நடந்து கொள்ளவில்லையெனில் தோனி அதன் பிறகு பொறுப்புள்ள கேப்டனாகியிருக்க முடியாது என்று சேவாக் தற்போது தெரிவித்துள்ளார்.

தோனி வந்த புதிதில் பெரிய சென்சேஷன், பாகிஸ்தானை புரட்டி எடுத்த 148 மற்றும் இலங்கை பந்து வீச்சை சிதறவிட்ட 183 நாட் அவுட் என்று கலக்கி கொண்டிருந்தார். ஆனால் அதன் பிறகு பல்வேறு காரணங்களால் தன் பேட்டிங்கை கொஞ்சம் மாற்றியமைத்து பினிஷிங் ரோல் எடுத்துக் கொண்டு பொறுப்புடன் ஆடினார். ஆனால் இவர் பினிஷ் செய்த மேட்ச் எல்லாம் முன் கூட்டியே முடித்திருக்க வேண்டிய போட்டிகள்தான், தோனி அதை 50 ஒவர் வரை இழுப்பார் என்று ஒரு முறை கவுதம் கம்பீர் கூறியதும் கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் திராவிட், தோனி இருவருக்குமே சக வீரராக இருந்த சேவாக், ஆரம்ப கால தோனி பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததற்கு திராவிட் அவரை ஒருமுறை கடிந்து கொண்ட சம்ப்வத்தை குறிப்பிட்டுள்ளார். ராஞ்சியில் பிறந்த தோனி அதன் பிறகு 2007-ல் கேப்டன்சியைப் பெற்ற போது வேறு ஒரு புது வீரராக அவதாரம் பூண்டார் என்றும் சேவாக் கூறினார்.

இந்தியா டிவிக்கு சேவாக் கூறும்போது, “திராவிட் கேப்டன்சியில் தோனிக்கு பினிஷர் ரோல் கொடுக்கப்பட்டது. ஒரு மோசமான ஷாட்டில் பொறுப்பற்ற முறையில் தோனி அவுட் ஆன போது திராவிட் அவரைக் கடிந்து கோண்டார். திராவிட் கோபித்துக் கொண்ட தருணம்தான் தோனியை மாற்றியது என்று நான் கருதுகிறேன். எனவே 2006-07 வாக்கில் பொறுப்பாக ஆடத்தொடங்கிய தோனி போட்டிகளை வெற்றிகரமாக பினிஷ் செய்து கொடுத்தார்.

தோனியின் இந்த மாற்றத்துக்குப் பிறகு இந்தியா 16 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது, இவரும் யுவராஜ் சிங்கும் பினிஷ் செய்வதை பார்க்க முடிந்தது. அதே போல் கங்குலி தனது 3ம் நிலையை தோனிக்காக விட்டுக் கொடுத்தார், காரணம் அப்போது 3ம் நிலையில் இறங்கி ஒரு சிறு அதிரடி ஆட்டம் ஆடும் பிஞ்ச் ஹிட்டர்களை கங்குலி தேடிக்கொண்டிருந்தார்.அதாவது தோனிக்கு அந்த 3ம் நிலையில் 3-4 வாய்ப்புகள் வழங்குவது இல்லையெனில் வேறு ஒரு பிஞ்ச் ஹிட்டரை பார்ப்பது என்று கங்குலி நினைத்தார். இவ்வாறு கூறினார் சேவாக்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!