முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளிகளில் பழுதடைந்த கட்டுமானங்களை விரைந்து சீர்செய்ய நடவடிக்கை எடுங்கள் : முதல்வருக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்

சனிக்கிழமை, 18 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

சென்னை : இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தீயில் கருகிய நிலையில் 10 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்த துக்கம் மறைவதற்குள் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது, 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், சக மாணவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

கொரொனா நோய் தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட நாட்கள் மூடப்பட்ட நிலையையும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழையையும் கருத்தில் கொண்டு பள்ளியின் கட்டிடங்களை பள்ளி நிர்வாகம் தானாகவே ஆய்வு செய்து சீரமைத்திருக்க வேண்டும். செய்ய தவறியதன் காரணமாக இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்திருக்கிறது. பள்ளி கல்வித்துறையும் ஆய்வு செய்ய தவறிவிட்டது. இது பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறையின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டுமானங்கள் குறித்து உடனடியாக அறிக்கை பெற்று, விரைந்து சீர் செய்ய அறிவுறுத்த வேண்டும். விபத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து