முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்து

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது.

தஞ்சை மாவட்டத்தை சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களுடன் இணைக்கும் வகையில் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிதாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில்  அணைக்கரையில்  பாலம் கட்டப்பட்டு வந்தது. பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் புதிய பாலத்தின் ஒரு பகுதி  இடிந்து விழுந்தது.பாலத்தின் சிமெண்ட் பலகை இடிந்து விழுந்தது. 

புதிய பாலத்தின் 5வது தூண் அருகே இணைப்புக்காக போடப்பட்டிருந்த சிமெண்ட் பலகை இடிந்து ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது. பாலம் இடிந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து