முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 3-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க தலைமை

திங்கட்கிழமை, 31 ஜனவரி 2022      அரசியல்
Image Unavailable

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை 3-ம் கட்டமாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அ.தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கும், வேலூர் மாநகராட்சியில் 59 வார்டுகளுக்கும், ஓசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கும்,ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கும், தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கும்,கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கும், திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கும், நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சியில் 26 வார்டுகளுக்கும்,குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகளுக்கும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகளுக்கும், திருவள்ளூர் வடக்கு மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் 27 வார்டுகளுக்கும், வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கும், பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், கடலூர் தெற்கு மாவட்டம் வடலூர் நகராட்சியில் 27 வார்டுகளுக்கும், நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சியில் 36 வார்டுகளுக்கும்,குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகளுக்கும்,கூடலூர் நகராட்சியில் 21வார்டுகளுக்கும், நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், அதிராம்பட்டிணம் நகராட்சியில் 27 வார்டுகளுக்கும், தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், சுரண்டை நகராட்சியில் 27 வார்டுகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உடன்பிறப்புகள் இணைந்து கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில் சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிவிப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ. பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!