முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குதிரைவால் – விமர்சனம்

சனிக்கிழமை, 19 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

Source: provided

நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித் & யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் குதிரைவால். படத்தின் நாயகன் கலையரசன்,  முதல் காட்சியிலேயே  ஒரு குதிரைவாலோடு உறக்கத்திலிருந்து விழிக்கிறார். குதிரைவால் முளைத்த காரணத்தைத் முதல் காட்சியிலிருந்து தேடி அலைகிறார் . தன் உண்மையான பெயரை மறந்து, தான் ஃபிராய்ட் என உணருகிறான் கலையரசன். கனவிலேயே தனக்கு வால் முளைத்தாக எண்ணி ஒரு குறிசொல்லும் பாட்டி, ஒரு ஜோசியர், ஒரு கணக்கு ஆசிரியர் என வெவ்வேறு ஆட்களிடம் ஆலோசனை கேட்கிறார். அவர்களின் ஆலோசனைகளால் படத்தின் அடுத்து அடுத்த காட்சிக்கு கதையை நகர்த்தி செல்கின்றார் இயக்குனர். குதிரைவாலின் காரணம் தேடிசெல்லும் பயணத்தை யாரும் மறக்க முடியாத அளவுக்கு உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். மேலும், கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது. அறிவு ஜிவிகளுக்கு மட்டுமே புரியும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் இயக்குனர்களான மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இருவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!