முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலி

வியாழக்கிழமை, 24 மார்ச் 2022      சினிமா
Image Unavailable

சென்னை தேனாம்பேட்டையில் நடிகர் சிம்பு கார் மோதி முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில் கடந்த 18-ந்தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்த முதியவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அப்பகுதியினர், முதியவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த முதியவர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 70) என்பது தெரியவந்தது. மேலும், முதியவர் மீது மோதிய கார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் நடிகர் சிம்புவின் கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, அவரது காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். தற்போது அந்த காரை ஓட்டி சென்ற தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் (29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து