முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருண் விஜய் மகன் அறிமுகமாகும் ஓ மை டாக்

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2022      சினிமா
Arun-Vijay 2022 04 18

Source: provided

2D எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ’ஓ மை டாக்’. இந்தப் படத்தை சரோ சண்முகம் இயக்கியிருக்கிறார். நடிகர் அருண் விஜய் அவரது மகன் ஆர்ணவ் அருண் விஜய், அவரின் தந்தை விஜயகுமார் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய படத்தின் இயக்குநர் சரோ சண்முகம், ஹாலிவுட்டில் வால் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான படம்போன்று ’ஓ மை டாக்’ படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்ததாகவும், இதனால் சர்வதேச குழந்தைகளுக்கான தரத்துடன் ஓ மை டாக் உருவாகியுள்ளது எனவும் கூறினார். இந்த கதைக்காக 7 வருடம் திரைக்கதை அமைத்ததாகவும் கூறியுள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள நாய்க்கு, இரண்டு ஆண்டுகள் பயிற்சி கொடுத்து படமாக்கியதாகவும் தெரிவித்தார். தமிழ் சினிமாவில் அப்பா - மகன் – பேரன் மூவரும் இணைந்து ஒரே படத்தில் நடிப்பது இதுவே முதல்முறையாகும் என்றார். இந்த திரைப்படம் வரும் 21ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து