முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைகளில் சேகரிக்கப்பட்ட உணவில் ஷிகெல்லா வைரஸ் கண்டுபிடிப்பு : கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2022      இந்தியா
Veena-George-2022-05-07

Source: provided

திருவனந்தபுரம் : திருவனந்தபுரம் காசர்கோட்டில் உள்ள ஒரு கடையில் ஷவர்மா சாப்பிட்ட தேவநந்தா என்ற சிறுமி திடீரென இறந்தார். அவர் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கேரள மாநிலம் மட்டுமின்றி தமிழகத்திலும் ஷவர்மா விற்பனையகங்களில் சுகாதாரத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவனந்தபுரம் காசர்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் ஷவர்மா மற்றும் மிளகுத் தூள் மாதிரிகளை உணவு பாதுகாப்புத் துறையினர் சேகரித்தனர்.

இந்த உணவகத்தில் உணவு உட்கொண்ட 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சேகரிக்கப்பட்ட உணவுகள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

இதில் நோய்க்கிருமி சால்மோனெல்லா மற்றும் ஷிகெல்லா ஆகியவை சிக்கன் ஷவர்மாவில் காணப்பட்டது. இதற்கிடையில், மிளகு தூளில் சால்மோனெல்லா கண்டறியப்பட்டது. இந்த மாதிரிகள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ‘பாதுகாப்பற்றவை’ என சான்றளிக்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்திய கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், இந்த விஷயம் தொடர்பாக மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இதற்கிடையில், விதிமீறல் செய்பவர்களைக் கண்டறிய மாவட்டத்தில் உள்ள பல்வேறு உணவகங்களில் அதிகாரிகள்  சோதனைகளை நடத்தினர். மேலும், 32 கடைகள் உரிமம் அல்லது பதிவு இல்லாமல் இயங்கியதை அதிகாரிகள் கண்டறிந்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து