முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓ.டூ விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜூன் 2022      சினிமா
Nayanthara 2022 06 19

Source: provided

நயன்தாரா, மாஸ்டர் ரித்விக் ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ஒ.டூ. இப்படத்தை ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கி உள்ளார். கதை, நயன்தாராவின் குழந்தை ரித்விக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மூச்சுவிடுவதில் சிரமம் பட்டு வருகிறார். அதற்கான மேல் சிகிச்சைக்கு கோவையில் இருந்து கொச்சிக்கு பேருந்து மூலம் செல்கிறார். செல்லும் வழியில் ஏற்படும் பயங்கர நிலச்சரிவால் பேருந்து மண்ணில் புதைந்து கொள்கிறது. இதில் நயன்தாரா, குழந்தை ரித்விக், பேருந்து ஓட்டுனர் உட்பட 9 பேர் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியில் பேருந்தில் சிக்கி கொண்ட அவர்கள் எப்படி தப்பித்தார்கள். நயன்தாராவின் குழந்தைக்கு சிகிச்சை கிடைத்ததா? என்பதுதான் படத்தின் மீதி கதை. நயன்தாராவின் மகனாக ரித்விக் முதல் படம் என்று சொல்ல முடியாத படி அருமையாக நடித்திருக்கிறார். இப்படத்தின் முழு கதையும் ஒரே ஒரு பேருந்தில் பயணிக்கிறது அந்த பேருந்தை பல கோணங்களில் எடுத்த ஒளிப்பதிவாளரை நிச்சயம் பாராட்டலாம். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். முதல் பாதியில் வேகமெடுத்த பேருந்து, இரண்டாம் பாதியில் சற்றே டயேடாகிவிட்டது என்றாலும் கூட, ஒரு தரமான நல்ல படைப்பைக் கொடுத்த இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!