LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீர்மானம் தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது: அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை: மனுக்களை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட் இன்று நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டபடி இன்று பொதுக்குழுவை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது எனவும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. பொதுக்குழு நடத்தவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்ற விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனவும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
ரத்து செய்ய வேண்டும்...
சென்னை ஐகோர்ட்டில், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகளில், "அ.தி.மு.க., அடிப்படை உறுப்பினராக உள்ளோம். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., சட்ட விதிகளுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. பொதுச்செயலாளரின் அதிகாரங்களை இந்த இரு பதவிகளுக்கும் வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்" என்று கூறி இருந்தனர்.
புதிதாக கூடுதல் மனு...
இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை ஐகோர்ட்டில் புதிதாக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், "பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகள்படி நிர்வாக ரீதியாக பொதுச்செயலாளருக்கு மட்டுமே இந்த கூட்டங்களை கூட்ட அதிகாரம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல், உள்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும்" என்பது உள்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இருந்தனர்.
கூடுதல் மனுக்கள்...
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜராகி, இந்த வழக்கில் கூடுதல் மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதால், வழக்கை 22-ந் தேதி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நேற்று விசாரிப்பதாக உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கின் விசாரணை நேற்று தொடங்கியது.
23 தீர்மானங்களுக்கு...
பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் முத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் வாதத்தை தொடங்கியுள்ளார். பொதுக்குழு அலுவல் நிகழ்வு குறித்து அஜெண்டா இது வரை வெளியிடப்படவில்லை என்றும் சண்முகம் தரப்பு கூறியது. அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களின் நகல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 23 வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில் இருந்து இ மெயில் வந்தது; அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறு எந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுவிட்டது. கட்சி விதிகளுக்கு முரணாக செயல்பட மாட்டோம் என்று நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழுவுக்கே...
எடப்பாடி தரப்பில் வாதிடும் போது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளர்கள் இணைந்தே பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைபாளரை விட பொதுக்குழுவுக்கே அதிக அதிகாரம் உள்ளது. பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்பது கட்சி விதி. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல. பொதுக்குழுவிற்கான நோட்டீஸ் ஜூன் 2ஆம் தேதியே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை பொதுக்குழு, செயற்குழு அஜெண்டாக்கள் வெளியிடப்பட்டது இல்லை. பொதுக்குழுவுக்கு விதிகளை திருத்தம் செய்ய அதிகாரம் உள்ளது.
தடை விதிக்கக் கூடாது...
கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவுக்கே அதிகாரம் எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ 2665 உறுப்பினர்கள் கொண்ட பொதுக்குழுவால் முடியும் பொதுகுழுவில் எந்த முடிவும் எடுக்கப்படலாம். இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் தர முடியாது. பொதுக்குழுவில் பெரும்பான்மையினரின் கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம். பொதுகுழுவில் எந்த உறுப்பினரும் குரல் எழுப்பலாம். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கூடாது; மனு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிடப்பட்டது.
ஒருங்கிணைப்பாளருக்கு...
ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் வாதிடும் போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து விதிகளை மாற்ற, திருத்தி அமைக்க அதிகாரம் உள்ளது.பொதுக்குழுதான் அனைத்தையும் முடிவு செய்யும் என்பது சரியானதுதான். ஆனால் அங்கு என்ன முடிவெடுப்பது என்பதை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் முடிவு செய்ய முடியும்.கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரே பொறுப்பு; பொதுக்குழு நிகழ்ச்சி நிரலை இருவரும்தான் முடிவு செய்ய முடியும். நேற்று முன்தினம் அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கபட்டு விட்டது . வேறு அஜெண்டா ஏதும் இருந்தாலும் இருவரும் சேர்ந்துதான் முடிவெடுக்க வேண்டும். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற எண்ணத்தில் பொதுக்குழுவுக்கு செல்ல முடியாது; நடக்கப்போவது என்ன என்பது ஒருங்கிணைப்பாளருக்கு முன்கூட்டியே தெரிய வேண்டும் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியமால் எந்த தீர்மானத்தையும் வைக்க முடியாது என வாதிடப்பட்டது.
தீர்ப்பு ஒத்திவைப்பு...
பொதுக்குழுவில் திடீரென யாராவது எந்த விவகாரத்தையாவது எழுப்ப வேண்டுமானால் என்ன செய்வது? நீதிபதி ஓ.பன்னீர் செல்வம் தரப்பிடம் கேள்வி எழுப்பினார். ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஒரு விவகாரத்தை முன்மொழிவது வேறு, அதனை எழுப்புவது என்பது வேறு என வாதிட்டது. அனைவரும் பொதுக்குழு நடத்தலாம் என தெரிவிக்கின்றனர் . பொதுக்குழு நடத்தலாம், கட்சி விதிகளில் திருத்தம் கூடாது என மனுதாரர் தரப்பு தெரிவிக்கின்றனர். வழக்கு விசாரணை 3 மணி நேரத்தை கடந்து சென்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு நேற்று இரவு இடைக்கால உத்தரவை பிறப்பித்து உள்ளது.
தடையில்லை...
அதில் இன்று நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடையில்லை என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்டபடி இன்று பொதுக்குழுவை நடத்தலாம். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடாது. பொதுக்குழுவுக்கு எந்த நிபந்தனையும் நீதிமன்றம் விதிக்கவில்லை. பொதுக்குழு நடத்தவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் போன்ற விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை என்றும் தீர்மானம் தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 18 hours 24 sec ago |
பொரி உப்புமா![]() 5 days 14 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 17 hours ago |
-
7 தைவான் அதிகாரிகளுக்கு சீனா பொருளாதார தடை
17 Aug 2022பெய்ஜிங் : அமெரிக்க எம்.பி.க்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.
-
50 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க நடிகையிடம் மன்னிப்பு கேட்ட ஆஸ்கர் குழு
17 Aug 2022லாஸ் ஏஸ்சல்ஸ் : 1973-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி 45-வது ஆஸ்கர் விருது விழா நடைபெற்றது.
-
2023 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை : சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியீடு
17 Aug 2022லண்டன் : 2023-27 ஆண்டுகளுக்கான ஆடவர் கிரிக்கெட் அட்டவணையை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது.
-
புதிதாக 9,062 பேருக்கு தொற்று: இந்தியாவில் சற்று அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு
17 Aug 2022இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
-
இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகை: ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் கடற்படை தொடர்ந்து கண்காணிப்பு
17 Aug 2022இலங்கைக்கு சீன உளவு கப்பல் வருகையை முன்னிட்டு தனுஷ்கோடியில் இந்திய கடலோர காவல் படை கப்பல் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
-
கென்ய அதிபர் தேர்தலில் வில்லியம் ரூட்டோ வெற்றி: வன்முறை வெடித்ததால் பதற்றம்
17 Aug 2022கென்யாவின் அதிபராக வில்லியம் ரூட்டோ வெற்றி பெற்ற நிலையில், அந்நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
-
ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்தது : டெல்லியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
17 Aug 2022புதுடெல்லி : ஜனாதிபதி, துணை ஜனாதிபதியின் சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
-
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியை வாங்க எலான் மஸ்க் முடிவு
17 Aug 2022வாஷிங்டன் : நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வாங்கப் போகிறேன் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்
-
3 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் : கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவு
17 Aug 2022சென்னை : 3 பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமனம் செய்து கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
-
அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
17 Aug 2022சென்னை : அ.தி.மு.க.வின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
யோகி ஆதித்யநாத்துக்கு இடமில்லை: பா.ஜ.க. பாராளுமன்ற குழுவிலிருந்து நிதின் கட்கரி, சிவ்ராஜ் சிங் விடுவிப்பு
17 Aug 2022பா.ஜ.க.வில் மிகப்பெரிய அளவிலான அமைப்பு ரீதியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
உடல்நலம் குறித்து சோனியாவிடம் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
17 Aug 2022புதுடெல்லி : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.
-
இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
17 Aug 2022சென்னை : இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோரின் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
-
சசிகலா புரடக்சன்ஸ் வெளியிடும் 3 புதிய படங்கள்
17 Aug 2022சினிமா தயாரிப்பு நிறுவனமான சசிகலா புரடக்சன்ஸின் துவக்கவிழாவும், இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியா நடிப்பில் “கா”, கிஷோர் நடிப்பில் “ட்ராமா” மற்றும் புது
-
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி: ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் பேட்டி
17 Aug 2022அ.தி.மு.க. பொதுக்குழு தீர்ப்பு எங்கள் தரப்பு நியாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று ஓ.பி.எஸ். வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்தார்.
-
2-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலை. அறிவிப்பு
17 Aug 20222-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் 22-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு: 16 கண் பால மதகுகள் மூடல்
17 Aug 2022மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்ததால், உபரிநீர் போக்கியான 16 கண் மதகு மூடப்பட்டது.
-
உலகின் ஆறு சிறந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூரு தேர்வு
17 Aug 2022பெங்களூரு : உலகின் சிறந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் பெங்களூரு நகரம் இடம் பெற்றுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.
-
எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படி இருக்கும் : ஓ.பி.எஸ். பேட்டி
17 Aug 2022சென்னை : எதிர்கால நடவடிக்கைகள் அனைத்தும் தொண்டர்களின் விருப்பப்படியே இருக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க ராணுவ அமைச்சருக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
இலங்கையில் அவசரநிலை நீட்டிக்கப்பட மாட்டாது : அதிபர் ரணில் விக்ரமசிங்கே தகவல்
17 Aug 2022கொழும்பு : இலங்கையில் அவசர கால சட்டம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதல்கட்டமாக வழங்க தமிழக அரசு திட்டம்: 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை
17 Aug 2022முதல்கட்டமாக 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஜோபைடனின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
17 Aug 2022வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
-
செஸ் போட்டி: முதல் சுற்றில் தமிழக வீரர் குகேஷ் வெற்றி
17 Aug 2022சென்னை : டர்கிஷ் செஸ் சூப்பர் லீக் போட்டியில் விளையாடி வரும் குகேஷ் முதல் சுற்றில் வெற்றியடைந்துள்ளார்.
-
கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Aug 2022கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.