முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதய்பூர் படுகொலை: மேலும் இருவர் கைது

வெள்ளிக்கிழமை, 1 ஜூலை 2022      இந்தியா
Udaipur 2022 06 29

Source: provided

முஹம்மது நபி பற்றிய நுபுர் ஷர்மாவின் கருத்தை ஆதரித்ததற்காக தையல்காரர் கன்னையா லால் ஜூன் 28 அன்று அவரது கடையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார். கொலையாளிகளான கௌஸ் முகமது மற்றும் ரியாஸ் ஆகியோர் கொலையின் விடியோவை பதிவேற்றியதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு(என்ஐஏ) பயங்கரவாத எதிர்ப்புப் படை(ஏடிஎஸ்) மற்றும் ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் ஆதரவுடன் விசாரித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை குற்றம் சாட்டப்பட்டவர்களின் தொடர்புடைய கூட்டாளியான மொஹ்சின் மற்றும் ஆசிப் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார். 

__________________

பா.ஜ.க.வில் இணைகிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்

89 வயதான அமரீந்தர் சிங் தற்போது அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார். அவர் அடுத்த வாரம் லண்டனிலிருந்து திரும்ப உள்ளார். லண்டனிலிருந்து திரும்பியவுடன் தனது பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியினை பாஜகவுடன் அவர் இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அறுவை சிகிச்சைக்குப் பின் பிரதமர் நரேந்திர மோடி, அமரீந்தர் சிங்கிடம் பேசியதாக கூறப்படுகிறது. 50 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வந்த அமரீந்தர் சிங் கடந்த ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறினார். 

காங்கிரஸில் இருந்து விலகியவுடன் அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை அவர் மறுத்துவிட்டார். அவர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்தார். பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். பாட்டியாலா தொகுதியிலிருந்து போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார். அமரீந்தர் சிங்கின் மனைவி பிரினீத் கவுர் காங்கிரஸில் தொடர்ந்து இருந்து வருகிறார். அவர் காங்கிரஸ் சார்பில் பாட்டியாலா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

_______________

இனி பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி 

பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதல் வரி விதித்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசின் நடவடிக்கையால் பெட்ரோல்லுக்கு ரூ.6, டீசலுக்கு கூடுதலாக ரூ.13 வரி செலுத்த வேண்டும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்த்து 294 டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது.

______________

மணிப்பூர் நிலச்சரிவு  - பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

மணிப்பூரின் நோனி மாவட்டம் தூபுலில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை தூபுல் ரயில் நிலையம் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், அதில் சிக்கி 7 பிராந்திய ராணுவ வீரா்கள் உள்பட 8 போ் பலியாகினா்.தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மீட்புப் பணியில் துரிதமாக ஈடுபட்டு பலியான 8 பேரது உடல்களையும் மீட்டனா். மேலும், 72 பேரை காணவில்லை. அதில் 43 ராணுவ வீரா்களும் அடங்குவா் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று தொடரும் மீட்புப் பணிகளில் இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.  அப்பகுதியில் மழை எச்சரிக்கை இருப்பதால் உயிரிழப்புகள் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து