முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியின் கேப்டனாக கே.லோகேஷ் ராகுல் நியமனம்

வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Lokesh-Rahul 2022-08-12

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

சுற்றுப்பயணம்... 

இந்திய அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

ரோகித் - ஹர்திக்...

ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியை பி.சி.சி.ஐ. கடந்த மாதம் 30-ம் தேதி அறிவித்தது. இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. மேலும் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பங்கேற்கவில்லை...

இந்நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துவார் எனவும், ஷிகர் தவான் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. தற்போது அவர் முழு உடற்தகுதியை பெற்றுள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளதால் ஜிம்பாப்வே தொடரில் விளையாட உள்ளார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

இந்திய அணி வீரர்கள்:

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து