முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து, லண்டன் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து ரெயில் சேவை கடும் பாதிப்பு

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      உலகம்
london-2022-08-18

Source: provided

லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கொளுந்து விட்டு எரிந்த தீ, வாகனம் நிறுத்துமிடத்துக்கும் பரவியது. இதனால் ரெயில் நிலையத்தில் இருந்து பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது. இதையடுத்து தீயை அணைக்கும் பணியில் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால் வேகமாக தீ பரவியதால் கட்டுப்படுத்த கடுமையாக போராடினர்.

ரெயில் நிலையம் அருகே வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டு கதவு, ஜன்னல்களை மூடி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தால் ரெயில் நிலையம் மூடப்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பயணிகள் அவதியடைந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis
View all comments

வாசகர் கருத்து