முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து விற்பனை

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2022      வர்த்தகம்
Gold 2021 11 23

தங்கம் விலை சவரனுக்கு 312 ரூபாய் அதிகரித்து பவுன் ரூ.39,520-க்கு விற்பனையானது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ரூ.38 ஆயிரத்துக்கும் கீழே விற்ற தங்கம் கடந்த 11-ந்தேதி ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 1 பவுன் தங்கம் ரூ.39,208-க்கு விற்றது. 

நேற்று பவுனுக்கு ரூ.312 அதிகரித்து ரூ.39,520-க்கு விற்கபனையானது. நேற்று முன்தினம் 1 கிராம் தங்கம் ரூ.4901-க்கு விற்றது. நேற்று கிராமுக்கு ரூ.39 அதிகரித்து ரூ.4940-க்கு விற்கப்பனையானது. இதேபோல் வெள்ளி விலையும் நேற்று அதிகரித்து விற்பனையானது. நேற்று முன்தினம் 1 கிராம் வெள்ளி ரூ.67.70-க்கு விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு 80 காசுகள் அதிகரித்து ரூ.68.50-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து