முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசாரணைக்கு அழைத்து வருபவர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும்: தமிழக காவல்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 27 மே 2023      தமிழகம்
chennai-high-court 2022-08-29

சென்னை, விசாரணைக்கு அழைத்து வரும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், விசாரணை நடைமுறைகள் அனைத்தும் காவல்நிலையத்தில் உள்ள பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த ரஜினி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தனக்கு எதிரான புகார் குறித்து விசாரிப்பதற்காக ஆஜராகுமாறு போலீசார் தன்னை துன்புறுத்துவதாகவும், விசாரணை என்ற பெயரில் போலீசார் தன்னை துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி சத்திகுமார் சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் மனுதாரருக்கு எதிராக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அது குறித்து விசாரணை நடத்துவதற்காகவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை விசாரணையில் மேஜிஸ்திரேட் கோர்ட் தலையிட முடியாது என்பதால், காவல்துறையினர் தங்களை துன்புறுத்தக் கூடாது என்ற கோரிக்கையுடன் ஐகோர்ட்டில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

பொதுவாக காவல்துறை விசாரணையில் ஐகோர்ட் தலையிடுவதில்லை என்று தெளிவுப்படுத்திய நீதிபதி, விசாரணைக்கு அழைக்கப்படுபவர்கள் துன்புறுத்தப்படுவதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தால், நீதிமன்றம் கண்மூடிக்கொண்டு இருக்காது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் விசாரணைக்கு மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதால், அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணைக்கு அழைப்பதற்காக அனுப்பப்படும் சம்மன் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். விசாரணை நடைமுறைகள் காவல்நிலையத்தில் உள்ள பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை துன்புறுத்துவதை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 23 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து