முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக்கூடாது: பள்ளி சீருடையில் உள்ள மாணவர்களை பஸ்ஸில் இருந்து இறக்கி விடக்கூடாது : நடத்துனர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
bus-2022 08 25

Source: provided

சென்னை : மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தால் பஸ் பாஸ் கேட்கக்கூடாது என்றும், அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மாணவர்-மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண அட்டைக்கான விபரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றினை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மாணவ-மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் பள்ளி வரையிலும் சென்று வர அனுமதிக்க வேண்டும்.

அதே போன்று, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு இசைக் கல்லூரி, அரசு கவின் கலைக் கல்லூரி, அரசினர் கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை கல்லூரி (மாமல்லபுரம்) அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழில் பயற்சி நிலைய மாணவ-மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அல்லது மாநகர போக்குவரத்து கழகத்தில் 2022-2023-ம் ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களிடம் காண்பித்து தத்தம் இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை மாநகர போக்குவரத்து கழகத்தால் கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் வரை கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து மாநகர போக்குவரத்து கழக நடத்துனர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

இந்த உத்தரவினை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது மேற்கூறிய அடையாள அட்டைகளை வைத்து இருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்டால் நடத்துனர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து