முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      இந்தியா
Kashmir

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

இந்தியாவில் சில மாநிலங்களில் இன்னும் நக்சலைட்டுகள் மற்றும் மாவோயிஸ்ட்டுகளின் நடமாட்டம் உள்ளது. இவர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் கூட பலரும் நக்சலைட்டுகளாகவும், மாவோயிஸ்ட்டுகளால் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று 4 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.  சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் ஜங்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சலைட்கள் பதுங்கியிருப்பதாக நக்சல் தடுப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து மாவட்ட ரிசர்வ் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சோட் துங்கிலி வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் சுட்டனர். இதில் 4 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.அவர்களது உடல்களை மீட்ட பாதுகாப்பு படையினர், சம்பவ இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து