முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய முன்னாள் முதல்வரின் பேரன் ஷிகர் பஹாரியாவை கரம் பிடிக்கிறார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்

வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2024      சினிமா
jhanvi-kapoor-2024-04-11

மும்பை, மராட்டிய முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழ், இந்தி திரையுலகின் முதல் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை ஸ்ரீதேவி இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மரணம் அடைந்தார். தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய படங்களை தயாரித்துள்ளார். 

இந்த நிலையில், ஜான்வி கபூரும், மராட்டிய முன்னாள் முதல்வர் சுஷில்குமார் ஷிண்டேயின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் இருவரும் காதலிப்பதை போனிகபூர் உறுதிப்படுத்தி உள்ளார். 

காதலரின் பெயர் பொறித்த நெக்லசை ஜான்வி கபூர் அணிந்துள்ளார். தற்போது திருமணத்துக்கு ஜான்வி கபூர் தயாராகி வருகிறார். திருப்பதியில் விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜான்வி கபூரும் திருப்பதி கோவிலில்தான் எனது திருமணம் நடக்கும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து