எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 1,000 கோடி ரூபாயில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் உள்பட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு வித்திட்ட திமுக அரசின் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து அக்கட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: ஊரில் ஒதுக்குப்புறத்தில் வாழ்பவர்களை ஊரின் நடுவே வாழச் செய்வதற்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெரியார் நினைவு சமத்துவபுரக் குடியிருப்புகளை ஏற்படுத்தினார். 100 வீடுகள் கொண்ட ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் 40 வீடுகளை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்து அங்கே ஒரு ஆதிதிராவிடர் வீட்டின் இரு புறங்களிலும் பிற சாதியினர் வீடுகளை அமைத்து அவர்களிடையிலே வேறுபாடுகள் இல்லாத சமத்துவ வாழ்க்கை மலரச் செய்தார். அங்கே சமத்துவச் சுடுகாடு, சமத்துவ சமூக நலக் கூடம் முதலிய அனைத்தையும் சமத்துவச் சிந்தனைகளோடு ஏற்படுத்தினார்.
முதலமைச்சரின் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் (CM-ARISE) 225 பயனாளிகளுக்கு 16 கோடியே 76 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 10 கோடியே 65 லட்சம் ரூபாய் வங்கிக் கடனுடன் 5 கோடியே 80 லட்சம் ரூபாய் மானியத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஊரகப்பகுதிகள் மட்டுமல்லாமல், நகர்ப்புறங்களிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய் வீதம் 2023-2024 முதல் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு பட்டியல் இனத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதியத்தின்கீழ் தொழில் முனைவோருக்கான சமூக நீதியை உறுதிப்படுத்திடும் நோக்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரால் நடத்தப்பட்டுவரும் நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றுக்கு முதலீடு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ் 21 புத்தொழில் நிறுவனங்கள் 28 கோடியே 10 லட்சம் ரூபாய் அளவுக்குப் பயன்பெற்ற நிலையில்; இத்திட்டத்தின் சிறப்பான வெற்றியைக் கருத்தில் கொண்டு 2023-24-ஆம் நிதியாண்டிற்கு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட 26 நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் பெண்களே நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.
தூய்மைப்பணியாளர் நல வாரியத்தின் மூலம் 87 ஆயிரத்து 327 உறுப்பினர்களுக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ‘மிக்ஜாம்’ புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் மழைநீர் வெளியேற்றுதல் மற்றும் தூய்மைப்பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக தலா 4000 ரூபாய் வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளனர்.
நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 மாணவர் விடுதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா சாலையிலுள்ள எம்.சி.ராஜா விடுதி வளாகத்திற்குள்ளேயே 1 லட்சம் சதுரஅடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிடர் மாணவர் விடுதி 45 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படுகிறது.
முனைவர் பட்டப் படிப்பிற்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கான உதவித் தொகை 50 ஆயிரம் ரூபாய் என்பது 1 லட்சம் ரூபாய் என உயர்த்தப்பட்டு; 2,974 மாணவர்கள் பயனடைந்து உள்ளனர். வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு 31 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி விடுதிகள் மற்றும் அரசுப் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் 1,000 ரூபாய் என்பது 1,400 ரூபாய் எனவும், கல்லூரி மாணாக்கர்களுக்கு 1,100 ரூபாய் என்பது 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது
கடந்த மூன்று ஆண்டுகளில் 166 கோடி ரூபாய்ச் செலவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் என அமைக்கப்பட்டுள்ளன.
வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் எவ்வித வேறுபாடுமின்றி, பிறர் போற்ற வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், கடந்த ஓராண்டில் மட்டும் 102 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தாட்கோவால் செயல்படுத்தப்படும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் கடந்த நிதியாண்டில் மட்டும் 10 ஆயிரத்து 466 பயனாளிகளுக்கு 152 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் (Tatkal Scheme) அவர்கள் மின் இணைப்புப் பெற 90 சதவீதம் மானியமாக. 46 கோடியே 65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு திமுக தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வு : 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்
21 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் அமலுக்கு வந்த எச் 1-பி விசா கட்டணம் உயர்வால் சுமார் 71 சதவீதம் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு: வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மோகன்லால்
21 Sep 2025திருவனந்தபுரம் : தனக்கு தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்த நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்
-
எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் : மத்திய அரசு கருத்து
21 Sep 2025புதுடெல்லி : எச்1-பி விசா திடீர் கட்டண உயர்வால் மனிதாபிமான விளைவுகள் ஏற்படும் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.