முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுத்தை நடமாட்டம் எதிரொலி: அரியலூரில் பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2024      தமிழகம்
School-holiday-Andhra

அரியலூர், சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று திடீர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் சிறுத்தை நடமாடி வரும் நிலையில், அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் மயிலாடுதுறையில் உலா வந்த சிறுத்தைதான் இதுவா எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்,  அரியலூர் மாவட்ட அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காலையில் மாணவர்கள் பள்ளிக்கு சென்ற நிலையில், பாதுகாப்பு கருதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று மதியத்துடன் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.  மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும்,  பாதுகாப்புடன் இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அரியலூர் மாவட்டத்தில் 24 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து