முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றாலை மின் நிலையங்கள் அமைத்ததில் தமிழகத்திற்கு 3-வது இடம்: மத்திய அரசு விருது வழங்கி கவுரவிப்பு

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
EB Power 2023 06 09

Source: provided

சென்னை :  காற்றாலை மின் நிலையங்களை அதிகளவு அமைத்ததற்காக, தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து விருது கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக 10,603 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. அவற்றில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியது போக எஞ்சியதை மின்வாரியத்துக்கு விற்பனை செய்கின்றன.

மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்துறை சார்பில், டெல்லியில் அண்மையில் உலக காற்று தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 2023-24ம் நிதியாண்டில் நாட்டில் காற்றாலை மின்நிலையம் அமைத்ததில் தமிழகம் 3-வது இடத்தைப் பிடித்ததற்காக விருது வழங்கப்பட்டது.

இவ்விருதை தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, மத்திய இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக்கிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் 586 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. இதே காலகட்டத்தில் குஜராத் மாநிலம் 1,600 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அமைத்து முதலிடத்தையும், கர்நாடகா 700 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை அமைத்து 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து