முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் சாதிக்கு இடம் கிடையாது : எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதன்கிழமை, 19 ஜூன் 2024      தமிழகம்
eps

Source: provided

தஞ்சை : சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க. என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக சசிகலா எப்படி சொல்கிறார். அ.தி.மு.க.வில் சாதிக்கு இடம் கிடையாது. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க.. 2021-ல் அரசியலில் இருந்து ஓய்வு என கூறிய சசிகலா இப்போது ஏன் வருகிறார். அ.தி.மு.க.வை காப்பாற்றுவேன் என சசிகலா கூறுவது, 3 ஆண்டுகள் வேலைக்கு செல்லாமல் திடீரென வேலைக்கு செல்வதுபோல் உள்ளது. இத்தனை நாட்களாக அ.தி.மு.க.வை காப்பாற்றியது தொண்டர்கள். அ.தி.மு.க.வில் எந்த சரிவும் இல்லை; தோல்வியை சந்திக்காத அரசியல் கட்சி எது?.

அ.தி.மு.க. ஆட்சியில் இயற்கை பேரிடர் காலங்களில் ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்பட்டது. குறுவை காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை திமுக அரசு சேர்க்கவில்லை, அதனால் விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கவில்லை. டெல்டா மாவட்டங்களில் விவசாய பிரச்சினைகள் இருந்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு முழுமையாக தண்ணீர் கிடைக்காத காரணத்தால் 3 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காய்ந்து கருகி வீணாகி போயின. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து