முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளாவிய உணவு பாதுகாப்புக்கான தீர்வுகளை இந்தியா கண்டுபிடித்து வருகிறது: பிரதமர் மோடி

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2024      இந்தியா
MODI 2023 04 30

Source: provided

புதுடெல்லி : இந்தியா இன்று உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டுபிடித்து வருகிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவத்தார். 

இந்தியா உணவு உபரி நாடாக மாறி விட்டதாகவும், உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு முயற்சித்து வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

65 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விவசாய பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாடு நேற்று புதுடெல்லியில் தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது கூட்டத்தில் அவர் பேசியதாவது,

65 ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற மாநாடு இந்தியாவில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த முறை இங்கு மாநாடு நடத்தப்பட்ட போது, இந்தியா சுதந்திரமடைந்தது. அது நாட்டின் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பிற்கு சவாலான நேரமாக இருந்தது. 

ஆனால், இன்று இந்தியா உணவு உற்பத்தியில் உபரி நாடாக திகழ்கிறது. உலகின் மிகப் பெரிய பால், பருப்பு மற்றும் மசாலா உற்பத்தியில் உலகிலேயே முதலிடத்தில் உள்ளது. அதே போல உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருத்தி, சர்க்கரை மற்றும் தேயிலை உற்பத்தியில் நாடு 2வது பெரிய நாடாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு உலகின் கவலையாக இருந்தது. இன்று இந்தியா உலகளாவிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தீர்வுகளை கண்டுபிடித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 1,900 புதிய காலநிலையை தாங்கக்கூடிய பயிர்களை வழங்கியுள்ளது. 

மேலும் ரசாயனம் இல்லாத இயற்கை விவசாயத்தை இந்தியா ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கும் இலக்கை எட்டுவதை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்த மாநாடு உலகளாவிய விவசாய சவால்களுக்கு இந்தியாவின் முன்முயற்சி அணுகுமுறையை எடுத்துக்காட்டுகிறது மற்றும் விவசாய ஆராய்ச்சி மற்றும் கொள்கையில் நாட்டின் முன்னேற்றங்களையும் வெளிப்படுத்துகிறது.

மேலும் இந்த மாநாடு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதையும், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் கொள்கை வகுப்பதில் செல்வாக்கு செலுத்துவதையும், டிஜிட்டல் விவசாயம் மற்றும் நிலையான விவசாய உணவு முறைகளில் முன்னேற்றம் உள்பட இந்தியாவின் விவசாய முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து