முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவக் கல்வி சேர்க்கையில் புதுவை அரசு பள்ளி மாணவர்கள் இடஒதுக்கீடு : சான்றிதழ் நடைமுறையில் மாற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      இந்தியா
Student 2023-05-25

Source: provided

புதுச்சேரி : மருத்துவக்கல்வி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்கள் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சான்றிதழ் பெறும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் 10 சதவீத அரசு ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகின்றது. கடந்த ஆண்டு 10 சதவீத இடஒதுக்கீட்டில் 20 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்தனர். 

இதற்கான சான்றிதழை சமர்ப்பிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் புதுச்சேரி பிராந்தியத்தில் முதன்மை கல்வி அதிகாரியிடமும், மற்ற பிராந்தியங்களில் மண்டல கல்வி அதிகாரியிடம் ஒன்று முதல் பிளஸ் 2 வரை படித்ததாக கல்விச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. 

அதைத் தொடர்ந்து கல்வித் துறை அதிகாரிகளிடம் அரசு பள்ளி மாணவர்கள் சென்று சான்றிதழ் பெற்று விண்ணப்பித்து வருகின்றனர்.  இதற்கிடையில் இந்த கல்வி சான்றிதழ் வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கலை கருத்தில் கொண்டு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, மாணவர்கள் தாங்கள் படித்த அரசு பள்ளிகளில் தொடர்ச்சியாக 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்ததற்கான கல்வி சான்றிதழை பெற்று சமர்ப்பித்தால் போதும் என சென்டாக் அறிவித்துள்ளது. 

அரசுப் பள்ளி மாணவர்கள் சமர்ப்பிக்கும் சான்றிதழை பள்ளி கல்வித் துறை ஆய்வு செய்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து சென்டாக் இந்த முடிவினை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து