முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப் 1 தேர்வு மூலச் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

சென்னை, குரூப் 1 தேர்வு  மூல சான்றிதழை வரும் 16-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. 

இது குறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வில் (குரூப் 1 பதவி) அடங்கிய பதவிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் முதன்மை எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள்  வருகிற 16-ம் தேதி வரை தங்களது மூலச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் ஓ.டி.ஆர் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.  

முதனிலை எழுத்துத் தேர்விற்கு தேர்வு கட்டண விலக்கு கோராத அனைவரும் முதன்மை தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ. 200 செலுத்த வேண்டும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம், சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முடிவடைவதால் தேர்வர்கள் வருகிற 15-ம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து