முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி தொடர்கிறது: அகிலேஷ் யாதவ்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      அரசியல்
Akhilesh yadav

எடாவா, காங்கிரஸ் கட்சியுடனான சமாஜ்வாடி கட்சியின் உறவு தொடர்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.  

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், தனது தந்தையுமான முலாயம் சிங் யாதவின் நினைவுநாளில் எடாவாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் இடைத்தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அகிலேஷ், இண்டியா கூட்டணி இங்கே இருக்கிறது என்பதை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் உறவு இன்னும் தொடர்கிறது. இது அரசியல் பேசுவதற்கான நேரம் இல்லை என்ற கூறினார். 

தொடர்ந்து அரியானா தேர்தல் முடிவுகள் குறித்த அகிலேஷின் கருத்து குறித்து கேட்ட போது அவர், நாங்கள் மீண்டும் சந்திக்கும் போது அதுகுறித்து விவாதிப்போம் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து