முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வரை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தகுதியுள்ள நிரந்தர ஊழியர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400 முதல் அதிகபட்சமாக ரூ.16,800 வரை போனஸாக பெறுவார்கள். போனஸ் அறிவிப்பால் 2.75 தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள். 

தகுதியுடைய.... 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பிலும் ஊழியர்களுக்கு போனஸ் தொகை வழங்கப்படும். அதன்படி இந்தாண்டு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்குத் தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழக பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பணிபுரியும் தகுதியுடைய சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு போனஸ் தொகை 8.33 சதவீதம் மற்றும் கருணைத் தொகையாக 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் வரை  போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கருணைத்தொகை... 

மேலும், உபரி தொகை இல்லாத பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் சி, டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் குறைந்தபட்ச போனஸ் அத்துடன் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வீட்டுவசதி வாரியம், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் ஆகியவற்றில் வேலை செய்யும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் தொகை மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்காலிக ஊழியர்களுக்கு....

தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை செய்யும் தகுதியுள்ள சி, டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 கருணைத்தொகை  போனஸ் தொகை வழங்கப்படும். இவை தவிரத் தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000ஐ கருணைத் தொகையாக வழங்கப்படும். இதன் மூலம் தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8400ம் அதிகபட்சம் ரூ.16,800ம் பெறுவர்.

2.75 லட்சம் பேருக்கு... 

மொத்தத்தில் தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் 2.75 லட்சம் பேருக்கு 369.65 கோடி ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது தவிர பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஆணைகள் தனியே வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து