முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெல்போர்னில் சபாநாயகர் அப்பாவுக்கு உற்சாக வரவேற்பு

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      உலகம்
Appavu 2024-11-09

மெல்போர்ன், மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்களின் சார்பில் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது. 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 

ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக சட்டமன்றப் பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். பின்பு, அங்கிருந்து புறப்பட்டு மெல்போர்ன் நகரைச் சென்றடைந்தார். நேற்று மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்கள் சார்பில்   நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு உரையாற்றியதாவது, 

 இந்த அப்பாவு 15 ஆண்டு காலம் ஆசிரியராக பணியாற்றியவன். ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதை தற்போது நான் நினைத்துப் பார்க்கின்றேன். எவ்வாறு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, நடத்தி கொண்டிருக்கிறீர்கள் என்பதை வியப்பாக பார்க்கின்றேன்.   எவ்வளவு கடினமாக உழைத்து, இங்குள்ள குழந்தைகளுக்கு தமிழைக் கற்றுக்கொடுத்து, நல்ல ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்ற அருமையான நிகழ்ச்சிகளை தயார் செய்துகொண்டு வந்திருக்கின்ற ஆசிரியப் பெருமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் பள்ளிக்கு தமிழக அரசு சார்பாக என்ன உதவி தேவை என்பதை என்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்தால், அதை நான் முதல்வரின்  கவனத்திற்கு எடுத்துச்சென்று, இப்பள்ளி இன்னும் மேம்பாடு அடைவற்கும். அனைவரும் தமிழ் கற்க வேண்டுமென்பதற்காகவும் வேண்டிய உதவிகளை நிச்சயமாகச் செய்வேன். இவ்வாறு அவர் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து