முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

400 பி.டாலர்களை தாண்டிய முதல் நபர் எலான் மஸ்க் புதிய சாதனை

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2024      உலகம்
Elon musk 2023-07-13

அமெரிக்கா, 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார்.

உலக பணக்காரரான எலான் மஸ்க் புதிய சாதனையை படைத்துள்ளார். டெஸ்லா, ஸ்பெஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ் சமூக வலை தளம் ஆகியவற்றின் உரிமை யாளரான அவரது சொத்து மதிப்பு சமீபகாலமாக ஏற்றமடைந்து வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்தார். டிரம்ப் வெற்றி பெற்றதும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் 65 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. அதேபோல் அவரது மற்ற நிறுவன பங்குகளும் விலை அதிகரித்தது. இதனால் எலான் மஸ்க் சொத்து மதிப்பு உயர்ந்தது.

இந்த நிலையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் நிகர சொத்து மதிப்பு 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை எலான் மஸ்க் படைத்துள்ளார்.ப்ளூம் பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 447 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.37 லட்சம் கோடி) எட்டியுள்ளது. ஸ்பெஸ்எக்ஸ் நிறுவ னத்தின் முதலீட்டாளர்கள் 1.25 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர் உயர்ந்து 440 பில்லியன் டாலராக அதிகரித்தது.மேலும் ஒரு ஒப்பந்தம் காரணமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன மதிப்பு சுமார் 350 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதனால் எலான்மஸ்க்குக்கு கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்தது.இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மஸ்க் தனது நிகர மதிப்பில் 218 பில்லியன் அமெரிக்க டாலர்களை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து