முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி அணியில் நடராஜன்

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      விளையாட்டு
Natarajan 2023-09-11

Source: provided

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் ,தமிழக வீரர் நடராஜன் டெல்லி அணியுடன் நேற்று இணைந்துள்ளார் . நடராஜனை ஐ.பி.எல்.  ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது 

____________________________________________________________________________________________

பெங்களூரு அணியில் கோலி

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த தொடருக்காக அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்த நிலையில் , நட்சத்திர வீரர் விராட் கோலி பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளார் . இது தொடர்பான புகைப்படத்தை அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

____________________________________________________________________________________________

வார்னர் சினிமாவில் அறிமுகம்

ஐ.பி.எல்.  கிரிக்கெட் தொடரிலிருந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலில் இவர் செய்யும் ரீல்ஸ்கள் மிகவும் புகழ் பெற்றவை.  தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என இந்திய விழாக்களுக்கு தவறாமல் வாழ்த்துகளைத் தெரிவிப்பார். "டேவிட் வார்னர் ஆஸ்திரேலியரை போல் அல்லாமல் இந்தியராகவே அதிகம் இருக்கிறார். நான் அதைத்தான் அவரிடம் சொல்லுவேன். 70 சதவிகிதம் இந்தியர்; மீதி 30 சதவிகிதம் ஆஸ்திரேலியர்” என வார்னர் குறித்து அவரது சக தோழர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தில் அந்தமாதிரி எதுவும் வரவில்லை. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் நடிப்பது உறுதியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ராபின்ஹூட் என்ற திரைப்படத்தில் டேவிட் வார்னர் நடிக்கிறார். இந்தப் படம் மார்ச்.28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நடிகர் நிதின், நடிகை ஸ்ரீ லீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார். நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

____________________________________________________________________________________________

சன்ரைசர்ஸ் அணியில் நிதீஷ் 

ஜனவரி முதல் காயம் காரணமாக என்.சி.ஏ. வில் இருந்தார் நிதீஷ் ரெட்டி தற்போது முழுமையான உடல் தகுதி பெற்றதாக பி.டி.ஐ.  செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகளும் நிதீஷ் ரெட்டி விளையாடலாம் எனக் கூறியுள்ளார்கள். மேலும் உடல்தகுதியை நிரூபிக்கும் யோ-யோ சோதனையிலும் தேர்ச்சிப் பெற்றுள்ளார். விரைவில் அணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதாகும் நிதீஷ் ரெட்டி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வெளியேறினார். கடந்த ஐ.பி.எல்.  தொடரில் 13 போட்டிகளில் 303 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 143ஆக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் அணி மார்ச்.23ஆம் தேதி ஹைதராபாத்தில் ராஜஸ்தானை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த அணிக்கு கேப்டனாக ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் இருக்கிறார். கடந்தமுறை இறுதிப் போட்டியில் தோல்வியுற்றனர். நடப்பு ஐ.பி.எல்.  தொடரில் வெளிநாட்டு கேப்டனாக இருப்பவர் இவர் மட்டுமே.

____________________________________________________________________________________________

உலக கோப்பை: நெய்மர் விலகல்

சமீபத்தில் 17 மாதங்களுக்குப் பின் முன்னாள் கேப்டன் நெய்மர் பிரேசில் அணியில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் கால்பந்து உலகின் இளவரசன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். மெஸ்ஸி, ரொனால்டாவுக்குப் பிறகு அதிக ரசிகர்களைக் கொண்டவர் நெய்மர். சௌதி லீக்கில் இருந்து வெளியேறிய நெய்மர் தற்போது தனது சிறுவயது அணியான சன்டோஷ் அணியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் சன்டோஷ் போட்டியில் நெய்மர் விளையாடவில்லை. இடது தொடையில் காயமென தகவல்கள் தெரிவிக்கின்றன. 33 வயதாகும் நெய்மர் பிரேசில் அணிக்காக 128 போட்டிகளில் 79 கோல்கள் அடித்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியில் விளையாடும் என்ட்ரிக் நெய்மருக்கு பதிலாக விளையாடவுள்ளார். தென்னமரிக்கா தகுதிச்சுற்றுப் போட்டியில் 5ஆவது இடத்தில் உள்ள பிரேசில் கொலம்பியாவை மார்ச்.20ஆம் தேதி சந்திக்கிறது. அடுத்த 5 நாள்களில் ஆர்ஜென்டீனாவை சந்திக்க இருக்கிறது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து