முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வின் கூட்டல் கழித்தல் கணக்கை வேறு ஒருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் : சட்டப்பேரவையில் அமைச்சர் பேச்சு

வெள்ளிக்கிழமை, 21 மார்ச் 2025      தமிழகம்
Tangam 2025-03-14

Source: provided

சென்னை : அ.தி.மு.க.வின் கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று பேரவையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மடிக்கணினி அறிவிப்பு குறித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: “அ.தி.மு.க. உறுப்பினர் தங்கமணி, கூட்டல் கழித்தல் கணக்கை இங்கே போட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், உங்களுடைய கூட்டல் கழித்தல் கணக்கை எல்லாம் வேறு ஒருவருடன் உட்கார்ந்து கொண்டு இன்னொருவர் போட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுவும் வேறு எங்கோ ஒருவர் உட்கார்ந்து, அ.தி.மு.க. தொண்டர்களுடைய எதிர்காலத்தை எல்லாம் நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவுக்கு சாணக்கிய தந்திரத்தோடு சிலர் எங்கோ உட்கார்ந்து கொண்டு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த மடிக்கணினி விவகாரத்தில் சற்றுக் கவனக்குறைவாக இருந்துவிட்டதைப் போல, உங்கள் மடியிலே இருக்கக்கூடிய கணத்தைப் பறிப்பதுக்கொள்ள நினைப்பவர்களிடம் இருந்தும் நீங்கள் அனைவரும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்பதை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த திட்டம் அறிவிக்கின்றபோது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் என்று சொன்னால், அதற்கு முதற்கட்டமாக இந்தாண்டு 2,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருக்கிறது. அப்படியென்றால், அடுத்தாண்டு இந்த திட்டத்துக்கு மேலும் இரண்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இப்போது நீங்கள் அந்த கணக்கை கூட்டிக் கழித்துப் பார்த்தால், உங்களுக்கு விடை தெரியும். எனவே, மாணவர்கள் விரும்பி அந்த மடிக்கணினியை பயன்படுத்துகிற அளவுக்கு ஒரு தரமான மடிக்கணியை வழங்கிட இந்த அரசு உறுதி பூண்டிருக்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து