முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இ.பி.எஸ்.க்கு செங்கோட்டையன் திடீர் புகழாரம்

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      தமிழகம்      அரசியல்
Sengottaiyan 2023-04-20

சென்னை, சட்டசபையில் பேச்சை தொடங்கும்போது, எடப்பாடியாரை வணங்கி பேச்சை தொடங்குகிறேன் என செங்கோட்டையன் பேசினார்.

அ.தி.மு.க.வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சரும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.செங்கோட்டையன் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் பெயரைக் குறிப்பிட்டு பேசுவதை தவிர்த்து வந்தனர்.

குறிப்பாக, கே.ஏ.செங்கோட்டையன் பொதுக்கூட்ட நிகழ்வுகளில் பேசும்போது, எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடுவதை தவிர்த்து வந்தார். சென்னையில் நேற்று இரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்தார்.

இதற்கிடையே, தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில், முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க. சார்பில் பங்கேற்று பேசினார். அப்போது, எடப்பாடியாரை வணங்கி பேச்சை தொடங்குவதாக தெரிவித்தார். திடீரென அவர் இவ்வாறு பேசியது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது, ஆளுங்கட்சி (தி.மு.க.) மற்றும் பிற கட்சி எம்.எல்.ஏ.க்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பலர் இருவருக்கும் இடையே இருந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாக பேசிக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து