எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை, : ஐ.சி.சி. தொடர்களில் இந்தியா - பாகிஸ்தானை ஒரே குழுவில் சேர்க்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
26 பேர் உயிரிழப்பு...
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 2008 ஆம் ஆண்டு மும்பையில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டது. மேலும், சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி விளையாட மறுத்ததால், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயில் நடத்தப்பட்டன.
ஒரே குழுவில்...
இந்த நிலையில், பி.சி.சி.ஐ. துணை தலைவர் ராஜீவ் சுக்லா ஐ.சி.சி.க்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பு போட்டிகளில் விளையாடாவிட்டாலும், இரு அணிகளும் ஐ.சி.சி. தொடர்களில் ஒரே குழுவில் தான் விளையாடுகின்றன. இந்தப் போட்டிகளுக்கு ரசிகர்களிடம் அதிக ஆதரவும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இனி நடக்கவிருக்கும் ஐ.சி.சி. தொடர்களில் இரு அணிகளையும் ஒரே குழுவில் இணைக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி. தரப்பில் எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


