எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெங்களூரு : விராட் கோலி, ஹேசில்வுட் அபார ஆட்டத்தால் 11 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது ஆர்.சி.பி.
விராட் கோலி விளாசல்...
ஐ.பி.எல். தொடரின் 42-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்.சி.பி., ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய ஆர்.சி.பி. அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. விராட் கோலி 42 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் விளாசினார். தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து 50 ரன்னில் அவுட்டானார். பில் சால்ட் 26 ரன்னும், டிம் டேவிட் 23 ரன்னும், ஜிதேஷ் சர்மா 20 ரன்னும் எடுத்தனர்.
ஜெய்ஸ்வால் அதிரடி...
இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார். அரை சதம் கடப்பார் என எதிர்பார்த்த நிலையில் 19 பந்தில் 3 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 49 ரன்னில் அவுட்டானார். நிதிஷ் ரானா 28 ரன்னும், ரியான் பராக் 22 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் துருவ் ஜூரல் அதிரடி காட்டினார். அவர் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
6வது வெற்றி...
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 194 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்.சி.பி. திரில் வெற்றி பெற்றது. இது ஆர்.சி.பி. அணியின் 6வது வெற்றி ஆகும். ராஜஸ்தான் அணியின் 7வது தோல்வி இதுவாகும். ஆர்.சி.பி. அணி சார்பில் ஹேசில்வுட் 4 விக்கெட்டும், குருணால் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


