எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் முதல் சுற்றிலேயே முன்னிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தோல்வி கண்டார். அடுத்த மாதம் 25-ம் தேதி பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் மாட்ரிட் ஓபன் போட்டியில் நோவக் ஜோகோவிச் பங்கேற்றார். முதல் சுற்றில் இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டியும், ஜோகோவிச்சும் மோதினர்.
இதில் அர்னால்டி 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 15 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மான்டி கார்லோ டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றிலும் ஜோகோவிச் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________________________________________________
புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. முதல் இடம்
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 46-வது லீக் ஆட்டம் டெல்லியில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்.சி.பி. அணி தொடர்ந்து 6 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறி அசத்தியது. 2வது இடத்தை குஜராத்தும், 3வது இடத்தை மும்பையும், 4வது இடத்தை டெல்லியும், பஞ்சாப் கிங்ஸ் 5வது இடத்தையும் பிடித்துள்ளது.
_________________________________________________________________________________________________
ராகுலை நக்கல் அடித்த கோலி
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியபெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இதனையடுத்து இது என்னோட ஹோம் கிரவுண்ட் என பெங்களூரு மைதானத்தில் கே.எல்.ராகுல் செய்த சைகையை டெல்லி மைதானத்தில் ஜாலியாக ரீ-க்ரியேட் செய்து விராட் கோலி கிண்டலடித்தார். முன்னதாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியில் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
_________________________________________________________________________________________________
சாதனை படைத்த புவனேஸ்வர்
18-வது ஐ.பி.எல். தொடரில், டெல்லியில் நேற்றிரவு நடந்த 46-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் அடித்தது. அடுத்து 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 3 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐ.பி.எல். தொடரில் புவனேஸ்வர் குமார் இதுவரை 193 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 18 ஆண்டு கால ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட் கைப்பற்றிய 2-வது வீரர் என்ற சாதனையை புவனேஸ்வர் குமார் படைத்துள்ளார்.
_________________________________________________________________________________________________
மலிங்கா சாதனையை முறியடித்த பும்ரா
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 45-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணி 19 ஆவது ஓவரில் 161 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய மலிங்காவின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். மும்பை அணிக்காக பும்ரா இதுவரை 174 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பாக மும்பை அணிக்காக மலிங்கா 170 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது.
_________________________________________________________________________________________________
சி.எஸ்.கே. குறித்து ரெய்னா
நடப்பு ஐ.பி.எல். தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 வெற்றி, 7 தோல்விகளை பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் நீடிக்கிறது. இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் கூறியதாவது: ஐ.பி.எல். ஏலத்திலேயே சி.எஸ்.கே. அணி தோற்றுவிட்டது. கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் அய்யர் போன்ற வீரர்களை ஏன் சி.எஸ்.கே. வாங்கவில்லை?
இந்த ஐ.பி.எல். ஏலத்தைப் பொறுத்தவரை தோனியின் தலையீடு ஏதும் இல்லை. முழுக்க முழுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுத்த முடிவு. தோனியைப் பொறுத்தவரை 43 வயதிலும் அணிக்கு தேவையானதை களத்தில் இருந்து செய்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவ்வளவு மோசமாக விளையாடி நான் பார்த்தது இல்லை. இளம் பிளேயர்கள் மற்றும் வாய்ப்பு கிடைத்தவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். என்னைப் பொறுத்தவரை தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடுவார். சி.எஸ்.கே. நிச்சயம் கம்பேக் கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-07-2025.
31 Jul 2025 -
இரண்டு அடுக்கு டெஸ்ட்: பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு
31 Jul 2025ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை நடத்தி வருகிறது. இதில் 9 அணிகள் புள்ளிகள் பட்டியலில் இடம்பெறும்.
-
ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: சரிவை சந்தித்த ஜெய்ஸ்வால்
31 Jul 2025துபாய்: ஐ.சி.சி.டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சரிவை சந்தித்துள்ளார்.
தரவரிசை பட்டியல்...
-
பாகிஸ்தான் அணியுடன் விளையாட மறுத்தது ஏன்..? இந்தியா விளக்கம்
31 Jul 2025பர்மிங்காம்: லெஜெண்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் (டபிள்யூ.சி.எல்.) தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட மறுத்தது குறித்து இந்திய அணி காரணம் தெரிவித்துள்ளது.
-
ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
31 Jul 2025நெல்லை: 4-வது நாளாக ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
-
அதிக ரிஸ்க் எடுத்து விட்டேன்: காயம் குறித்து பென் ஸ்டோக்ஸ்
31 Jul 2025லண்டன்: ஓவல் டெஸ்ட்டில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாமல் சென்றது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை
31 Jul 2025புதுடெல்லி: கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கில்
31 Jul 2025லண்டன்: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த கேப்டன் என்ற மாபெரும் சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
-
11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்
31 Jul 2025சென்னை, தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
உடல்நிலை குறித்து விசாரிக்க முதல்வரை நேரில் சந்தித்தேன் தே.மு.தி.க. பிரேமலதா பேட்டி
31 Jul 2025சென்னை: ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
-
நெல்லை ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தை கைது
31 Jul 2025திருநெல்வேலி: கொலையான கவின் செல்வகணேஷ், கொலை செய்ததாக சரணடைந்த சுர்ஜித், சுர்ஜித்தின் தந்தை எஸ்.ஐ. சரவணனை போலீசார் கைது செய்தனர்.
-
ஓவல் கடைசி டெஸ்ட் போட்டி: முதல் இன்னிங்ஸில் இந்தியா நிதான ஆட்டம்
31 Jul 2025லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
-
அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மதுரை கோர்ட்டுக்கு மாற்றம்
31 Jul 2025சிவகங்கை: திருப்புவனம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இருந்த அஜித்குமார் கொலை வழக்கு ஆவணங்கள் அனைத்தும் மதுரை தலைமை குற்றவியல் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டன.
-
டாஸில் தோற்பது குறித்து கவலை இல்லை: கேப்டன் ஷுப்மன் கில்
31 Jul 2025லண்டன்: நாங்கள் போட்டியில் வெல்லும்வரை டாஸில் தோற்பதை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம் என்று இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
-
பறக்கும் ரயில் நிறுவனம் மெட்ரோவுடன் எப்போது இணைக்கப்படும்? கனிமொழி
31 Jul 2025சென்னை: பறக்கும் ரயில் நிறுவனம் குறித்து பாராளுமன்றத்தில் கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.
-
கோவையில் ஆக.5-ல் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
31 Jul 2025சென்னை, காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் வரும் 5-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தமிழக அரசியலில் புதிய திருப்பம்: பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓ.பி.எஸ்...!
31 Jul 2025சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெறாது என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
-
கவினின் பெற்றோரை சந்தித்து கனிமொழி எம்.பி. ஆறுதல்
31 Jul 2025தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் படுகொலை செய்யப்பட்ட கவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறிய கனிமொழி எம்.பி, ஆணவக் கொலை தொடர்பாக சட்டம் நிறைவேற
-
கீவ் நகரம் மீது ரஷ்யா தாக்குதல்: 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் பலி
31 Jul 2025உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உள்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
உண்மை தெரியாமல் பேச வேண்டாம்: சுர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியீடு
31 Jul 2025நெல்லை, என் அப்பா, அம்மாவை விட்டுவிடுங்கள். உண்மை தெரியாமல் பேச வேண்டாம் என்று சுர்ஜித்தின் சகோதரி தெரிவித்துள்ளார்.
-
நட்புடன் நலம் விசாரிப்பு: பிரேமலதாவுக்கு முதல்வர் நன்றி
31 Jul 2025சென்னை: நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிரேமலதாவிற்கு நன்றி என எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
இந்தியாவும் - ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்கள் அதிபர் ட்ரம்ப் விமர்சனம்
31 Jul 2025புதுடில்லி: இந்தியாவும் ரஷ்யாவும் செத்த பொருளாதாரங்களைக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்திருக்கிறார்.
-
பாக்.கிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் சூழல் வரலாம்: ட்ரம்ப்
31 Jul 2025வாஷிங்டன், ஒருநாள் இந்தியாவுக்குக்கூட பாகிஸ்தான் எண்ணெய் விற்பனை செய்வார்கள் என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
யு-19: சூரியவன்ஷிக்கு வாய்ப்பு
31 Jul 2025ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
-
எல்.பி.ஜி. சிலிண்டர் லாரிகள் வேலைநிறுத்தம் திடீர் வாபஸ்
31 Jul 2025சென்னை: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகத்தினர் எல்.பி.ஜி. சிலிண்டர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றது.