முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரை உலகின் தேவசேனா தேவயானி - வனிதா புகழாரம்

செவ்வாய்க்கிழமை, 29 ஏப்ரல் 2025      சினிமா
Devayani 2025-04-29

Source: provided

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். மே மாதம் 9ம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,

இந்த படத்தின் இசை மட்டும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கே.பாக்யராஜ், சீமான், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், “தேவயானியின் மிகப்பெரிய ரசிகை நான். எல்லோருக்கும் காதல் கோட்டை தேவயானியை பிடிக்கும் என்றால் எனக்கு கல்லூரி வாசல் படத்தில் நடித்த அந்த பப்ளியான தேவயானியை ரொம்ப பிடிக்கும். ரொம்பவே எளிமையான நல்ல இதயம் கொண்டவர். அவரை இந்த திரை உலகின் தேவசேனா இன்று தாராளமாக சொல்லலாம். விஜய் சொன்னது போல 20 வயதில் ஒரு பெண் ஹீரோயினாக இருப்பது அதிசயம் அல்ல. ஆனால் 40 வயதிலும் கதாநாயகியாக நிற்பது தான் பெரிய விஷயம். மனோரமா ஆச்சி, ஊர்வசி போல அவரும் ஒரு இடத்தை பெறுவார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து