முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ. புதிய தலைவர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு

திங்கட்கிழமை, 29 செப்டம்பர் 2025      விளையாட்டு
BCCI 2023 06 13

Source: provided

மும்பை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வானார்.

போட்டியின்றி... 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இதில், புதிய நிர்வாக பொறுப்புக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வானார்.

நீடிக்க முடியாது... 

இதுவரை தலைவராக இருந்த ரோஜர் பின்னிக்கு 70 வயது கடந்து விட்டதால், கிரிக்கெட் வாரியத்தின் விதிப்படி 70 வயதை கடந்தவர்கள் நிர்வாக பொறுப்பில் நீடிக்க முடியாது என்பதால் கடந்த மாதம் அவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கினார். அதைத் தொடந்து இப்போது பி.சி.சி.ஐ.யின் 37-வது தலைவராக மிதுன் மன்ஹாஸ் அரியணையில் ஏறுகிறார்.

டெல்லி அணியின்...

45 வயதான மிதுன் மன்ஹாஸ் சர்வதேச போட்டியில் ஆடியதில்லை. ஆனால் முதல்தர கிரிக்கெட்டில் டெல்லி மற்றும் ஜம்மு-காஷ்மீர் அணிக்காக மொத்தம் 18 ஆண்டுகள் விளையாடி உள்ளார். அவர் டெல்லி அணியின் கேப்டனாக இருந்த போது தான், விராட் கோலி முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். முதல்தர போட்டியில் 157 ஆட்டங்களில் விளையாடி 27 சதம், 49 அரைசதம் உள்பட 9,714 ரன்களும், ‘லிஸ்ட் ஏ’ என்படும் உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் 130 ஆட்டங்களில் ஆடி 5 சதம் உள்பட 4,126 ரன்களும் குவித்துள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், புனே, டெல்லி அணிக்காக ஆடியுள்ள அவர், பஞ்சாப், பெங்களூரு, குஜராத் அணிகளின் பேட்டிங் ஆலோசகராவும் பணியாற்றி இருக்கிறார். ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

துணைத்தலைவராக... 

துணைத்தலைவராக ராஜீவ் சுக்லா, செயலாளராக தேவஜித் சைக்யா நீடிக்கிறார்கள். இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கர்நாடகாவைச் சேர்ந்த ரகுராம் பாத் பொருளாளராகவும், இணைச் செயலாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் இணைகிறார்கள். இந்திய அணியின் தேர்வு குழு உறுப்பினர்களாக எஸ்.சரத், சுப்ரதோ பானர்ஜி ஆகியோரது இடத்திற்கு முன்னாள் பவுலர்களான அனுபவம் வாய்ந்த பிரக்யான் ஓஜா, ஆர்.பி.சிங் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரின் கீழ் செயல்படுவார்கள். அகர்கரின் பதவி காலம் அடுத்த ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி வரை உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து